Monday, June 22
Shadow

Tag: #நயன்தாரா

மற்ற நடிகர்களிடமிருந்து சிவகார்த்திகேயன் வேறுபட்டவர்: நடிகர் சார்லி

மற்ற நடிகர்களிடமிருந்து சிவகார்த்திகேயன் வேறுபட்டவர்: நடிகர் சார்லி

Latest News, Top Highlights
24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `வேலைக்காரன்'. மோகன் ராஜா இயக்கத்தில் சமூக பிரச்சனையை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், சார்லி என பலரும் நடித்துள்ள இந்த படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. எந்த ஒரு படத்திற்கும் உணர்வுகள் தான் ஜீவன் தரும். கதாபாத்திரங்களை உணர்வுப்பூரமாக அமைத்தால் அது மக்களிடையே நிச்சயம் போய் சேரும். இது போன்ற கதாபாத்திரத்தில் தான் நடிகர் சார்லி வேலைக்காரன் படத்தில் நடித்திருக்கிறார். மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தை கதாபாத்திரத்தில் சார்லி நடித்துள்ளார்....
வேலைக்காரன் வழக்கத்துக்கு மாறான ஒரு சினிமா: ஒளிப்பதிவாளர் ராம்ஜி

வேலைக்காரன் வழக்கத்துக்கு மாறான ஒரு சினிமா: ஒளிப்பதிவாளர் ராம்ஜி

Latest News, Top Highlights
தனது தரமான சிறந்த ஒளிப்பதிவின் மூலம் ஒட்டு மொத்த படக்குழுவையும் ஆச்சர்யப்படுத்தும் எந்த ஒரு ஒளிப்பதிவாளரும் தன்னுடைய துறையை மட்டுமே பெருமிதத்துடன் நினைவு கூர்வார். இதற்கு முற்றிலும் மாறாக, குழந்தை உள்ளத்தோடு ஒட்டு மொத்த குழுவின் உழைப்பையும் மனதார பாராட்டிக் கொண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி. இயக்குனர் ராஜாவின் திறமையான இயக்கத்தை பற்றி ராம்ஜி கூறும்போது, "சென்னை வெள்ளத்தின் போது வேலைக்காரன் படத்தின் ஒரு வரிக்கதையை எனக்கு சொன்னார் மோகன் ராஜா. அவர் சொன்ன அந்த கான்செப்ட் என்னை கவர்ந்தது, இந்த படம் நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அவரிடம் உறுதி அளித்தேன். வேலைக்காரன் வழக்கத்துக்கு மாறான ஒரு சினிமா, வருங்கால தலைமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமான படம். மோகன் ராஜா மற்றும் அவரின் உதவி இயக்குனர்களின் ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பை பார்த்து ஆச்சர்யப்பட்டேன். ஒவ்வொரு நாளும் ம...
அடிதட்டு மக்களின் யதார்த்தத்தை காட்டும் படம் வேலைக்காரன் – கலை இயக்குநர் முத்துராஜ்

அடிதட்டு மக்களின் யதார்த்தத்தை காட்டும் படம் வேலைக்காரன் – கலை இயக்குநர் முத்துராஜ்

Latest News, Top Highlights
ஒரு படத்தின் பட்ஜெட்டை அப்படத்தின் கதை தான் முடிவு செய்யும். பெரிய பட்ஜெட் படமென்றால் அதன் கதையும் அவ்வளவு விரிவாகவும் பெரிதாகவும் இருக்கும். இது போன்ற பெரிய பட்ஜெட் படங்களுக்கு கலை இயக்கம் தூணாக இருக்கும். அப்படியான ஒரு படம் தான் 'வேலைக்காரன்'. சிவகார்த்திகேயன், நயன்தாரா மற்றும் பஹத் பாசில் நடிப்பில் , மோகன் ராஜாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'வேலைக்காரன்'. இப்படத்தை '24ஏ.எம். ஸ்டூடியோஸ்' ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் இப்படத்திற்காக பிரத்யேகமாக போடப்பட்ட 'ஸ்லம்' எனப்படும் 'சேரி' வாழ்வியலை பிரதிபலிக்கும் மிகப்பெரிய செட் உருவான விடியோவை வெளியிட்டனர். இப்படத்தின் கலை இயக்குனர் முத்துராஜ் இந்த செட்டின் யதார்த்தத்தின் மூலமும் அளவுகோல் மூலமும் அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளார். இதுகுறித்து கலைஇயக்குனர் முத்துராஜ் பேசுகைய...
`வேலைக்காரன்’ படத்துக்கு கேரளாவில் கிடைத்த வரவேற்பு

`வேலைக்காரன்’ படத்துக்கு கேரளாவில் கிடைத்த வரவேற்பு

Latest News, Top Highlights
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பகத் பாஷில், நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வேலைக்காரன்’ படத்தின் கேரள உரிமை அதிக விலைக்கு விற்பனையாகி உள்ளது. சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `வேலைக்காரன்'. மோகன் ராஜா இயக்கத்தில் சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்திருக்கிறார். மலையாள நடிகர் பகத் பாஷில், பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், ரோபோ சங்கர், விஜய் வசந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் மலையாள வெளியீட்டு உரிமையை ஈ4 நிறுவனம் அதிக விலைக்கு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன் படங்களுக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், பகத்பாசில், நயன்தாரா நடித்திரு...
நயன்தாரா இடத்தை பிடித்த சமந்தா

நயன்தாரா இடத்தை பிடித்த சமந்தா

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா நடிக்கவிருந்த படத்தில் சமந்தா ஒப்பந்தமாகி இருக்கிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான படம் `யு-டர்ன்'. பவன் குமார் இயக்கத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ராதிகா சேத்தன், திலீப் ராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து தற்போது தமிழிலும் ரீமேக் செய்யப்படுகிறது. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், ஷ்ரத்தா நடித்த கதாபாத்திரத்தில் பத்திரிக்கை நிருபராக சமந்தா நடிக்க இருக்கிறார். தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறும், விமர்சங்களை கருத்தில் கொண்டும் கதையின் திரைக்கதை மற்றும் முடிவில் மாற்றம் கொண்டுவர கவன்குமார் முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. குற்றப் பின்னணியை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இ...