Tuesday, February 11
Shadow

நயன்தாரா இடத்தை பிடித்த சமந்தா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா நடிக்கவிருந்த படத்தில் சமந்தா ஒப்பந்தமாகி இருக்கிறார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான படம் `யு-டர்ன்’. பவன் குமார் இயக்கத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ராதிகா சேத்தன், திலீப் ராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து தற்போது தமிழிலும் ரீமேக் செய்யப்படுகிறது.

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், ஷ்ரத்தா நடித்த கதாபாத்திரத்தில் பத்திரிக்கை நிருபராக சமந்தா நடிக்க இருக்கிறார். தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறும், விமர்சங்களை கருத்தில் கொண்டும் கதையின் திரைக்கதை மற்றும் முடிவில் மாற்றம் கொண்டுவர கவன்குமார் முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. குற்றப் பின்னணியை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்க இருக்கிறது.

இந்த படம் தவிர்த்து சமந்தா தற்போது விஷால் ஜோடியாக `இரும்புத்திரை’, சிவகார்த்திகேயன் ஜோடியாக `சீமராஜா’, விஜய் சேதுபதியுடன் `சூப்பர் டீலக்ஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர சில தெலுங்கு படத்திலும் நடிக்கிறார்.

Leave a Reply