படபிடிப்பில் தகாராறு செய்த ரௌடியை அடித்த P. C.ஸ்ரீராம்
மணிரத்னம் இயக்கத்தில் கமல், சரண்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'நாயகன்'. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்த அப்படத்துக்கு இளையராஜா இசையமைத்தார். முக்தா பிலிம்ஸ் தயாரிப்பில் அக்டோபர் 21, 1987ல் இப்படம் வெளியானது.
இப்படம் வெளியாகி 29 வருடங்கள் ஆவதை முன்வைத்து #29YearsOfNayagan என்ற டேக்கில் பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இப்படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பில் இறுதிக்காட்சி எப்படி, எங்கு படமாக்கப்பட்டது தெரியுமா?
அடையாறில் தண்ணீரை எடுத்து, கமல் மீது மழை பெய்வது போன்ற காட்சியை காட்சிப்படுத்த திட்டமிட்டனர். அனைத்துமே தயாராக இருந்த போது, இவர்கள் படப்பிடிப்பு நடத்திய ஏரியாவில் உள்ள ரவுடி ஒருவர் "எப்படி இங்கு படப்பிடிப்பு நடத்தலாம்" என்று பேசி படப்பிடிப்புக்கு இடையூறு செய்தாராம்.
மாலை நேரம் என்பதால் ஒளியும் குறைந்து கொண்டே வருகிறது. ஒளியமைப்பு குறைவதற்குள் காட்சிப்படுத...
