Friday, November 6
Shadow

Tag: #ப்ரியாவாரியர் #கோர்ட் முஸ்லிம் #priyavarrior #muslim #court

கோர்ட் படியேறிய புருவ புயல் பிரியா வாரியர்.. வருத்தத்தில் ரசிகர்கள்

கோர்ட் படியேறிய புருவ புயல் பிரியா வாரியர்.. வருத்தத்தில் ரசிகர்கள்

Latest News, Top Highlights
புருவ புயல் பிரியா வாரியர் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக ஏற்று உச்சநீதிமன்றம் நாளை விசாரணை நடத்த உள்ளது. கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். படித்து வருபவர் பிரியா வாரியர். இவர் நடித்துள்ள "ஒரு அடார் லவ்' என்ற மலையாள திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அந்தத் திரைப்படத்தின் பாடல் காட்சி சமீபத்தில் யூடியூப்பில் வெளியானது. தனது சகமாணவன் கதாப்பாத்திரத்துடன் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அந்த பாடல் இருந்தது. அதில் புருவத்தை வளைத்து இவர் செய்யும் சேஷ்டை மற்றும் கண்ணடிப்பு காட்சிகள் வைரலாக மாறி தேசிய அளவில் புகழை பெற்றுக்கொடுத்தன. இந்நிலையில், அவருக்கு எதிராக, தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதில் உள்ள ஃபலக்னாமா காவல் நிலையத்தில் கடந்த 14ம் தேதி, காதலர் தினத்தன்று ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பிரியா வாரியர் நடித்த அந்தப் பாடலின் வரிகள் முஸ்லிம் ச...