Wednesday, November 18
Shadow

குடும்பங்கள் கொண்டாடும் படைப்பாக உருவாகும் வாலி மோகன் தாஸின் புதிய திரைப்படம்! – விறுவிறுப்பாக நடைபெறும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 01’ படப்பிடிப்பு

குடும்பங்கள் கொண்டாடும் படைப்பாக உருவாகும் வாலி மோகன் தாஸின் புதிய திரைப்படம்! – விறுவிறுப்பாக நடைபெறும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 01’ படப்பிடிப்பு

‘ரங்கோலி’, ‘மெட்ராஸ்காரன்’ ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் வாலி மோகன் தாஸ், அடுத்ததாக இயக்கி வரும் புதிய திரைப்படமான ‘புரொடக்‌ஷன் நம்பர் 01’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தியா ஃபிலிம் கம்பெனி தனது முதல் தயாரிப்பாக உருவாக்கும் இப்படத்தில் தேஜய் அருணாசலம் கதாநாயகனாக நடிக்கிறார். திவிஜா பிரபாகர் கதாநாயகியாகத் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். வயது வித்தியாசமின்றி குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து ரசிக்கும் வகையில், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படைப்பாக இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கப் பணிகளை வாலி மோகன் தாஸ் மேற்கொள்கிறார். எழுத்துப் பணிகளில் அவருடன் உமர் எஸ். இணைந்துள்ளார். படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். அனுபவமிக்க ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவுப் பொறுப்பை ஏற்றுள்ளார்.

இந்தியா ஃபிலிம் கம்பெனி, ஸ்ரீ சுமனோஹரா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் கிராட்டிட்யூட் புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் கூட்டாக இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன.

தனது முதல் படமான ‘ரங்கோலி’ மூலம் இயக்குநராக அறிமுகமான வாலி மோகன் தாஸ், தொடர்ந்து ஷேன் நிகம், நிஹாரிகா கொனிடேலா, கலைராசன் உள்ளிட்டோர் நடித்த ‘மெட்ராஸ்காரன்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். இரண்டு படங்களிலும் தனது இயக்கத் திறமையை வெளிப்படுத்திய அவர், தற்போது தனது அடுத்த படைப்பில் குடும்ப ரசிகர்களை இலக்காகக் கொண்டு களமிறங்கியுள்ளார்.

கதைக்களம், நடிகர்களின் தேர்வு, தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு என ஒவ்வொரு அம்சத்திலும் கவனம் செலுத்தி உருவாகி வரும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 01’, இயக்குநர் வாலி மோகன் தாஸின் திரைப்பயணத்தில் மற்றுமொரு முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் கட்டப் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இதர முக்கிய அறிவிப்புகள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. குடும்ப உணர்வுகளையும் கலகலப்பான பொழுதுபோக்கையும் இணைத்து உருவாகும் இப்படம் திரையில் எத்தகைய அனுபவத்தைத் தரப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Director Valli Mohan Das’ Next Film ‘Production No. 01’ Progresses at a Brisk Pace; First Schedule Underway!

Director Valli Mohan Das, who earned recognition with films such as Rangoli and Madras Kaaran, is gearing up for his next directorial venture, tentatively titled Production No. 01. The first schedule of the film is currently progressing at a brisk pace.

Marking the maiden production venture of India Film Company, the film features Tejay Arunachalam in the lead role, while Divija Prabhakar makes her debut as the female lead. Designed as a wholesome family entertainer, the film aims to offer an engaging cinematic experience for audiences across all age groups.

Valli Mohan Das is producing and directing the film. The writing is jointly handled by Valli Mohan Das and Umar S. Acclaimed music composer Sam C.S. is composing the music, while cinematographer Arthur A. Wilson is handling the camera work.

The film is jointly produced by India Film Company, Sri Sumanohara Productions and Gratitude Productions.

Valli Mohan Das made his directorial debut with Rangoli, which was released in 2023. He subsequently directed Madras Kaaran, starring Malayalam actor Shane Nigam, Niharika Konidela and Kalaiyarasan. Following these two films, his latest project has already begun generating interest among moviegoers.

With its first schedule currently underway, the team is working towards creating an entertaining film that combines an engaging storyline with elements that appeal to family audiences. The collaboration of an interesting cast and an experienced technical team further adds to the anticipation surrounding the project.

As the maiden production venture of India Film Company, Production No. 01 marks an important milestone for the banner. Audiences are now looking forward to further announcements, including the film’s title reveal, first-look poster and other updates.

With Rangoli and Madras Kaaran behind him, Valli Mohan Das is now set to present another distinctive cinematic offering. Expectations are building over what he has in store for audiences with Production No. 01.