Wednesday, June 17
Shadow

இவரை போல தமிழ் ஹீரோகள் தோல்வியை ஏற்பார்களா ?

வாழ்க்கையில் எல்லா விஷயங்களிலும் வெற்றி தோல்வி உண்டு பொதுவாக பலர் வெற்றியை கொண்டாடுவார்கள் தோல்விக்கு பல காரணங்கள் சொல்ல்வார்கள் வெற்றியை ஏற்கும் மனது தோல்வியை ஏற்பதில்லை இதற்கு ஒரு முன்னணி நடிகர் சொல்லி இருப்பதை பாருங்க

திரையுலகத்தைப் பொறுத்தவரையில் அனைவருமே வெற்றிக்காகத்தான் உழைப்பார்கள். ஆனால், அனைத்துப் படங்களுமே வெற்றி பெறுவதில்லை. படங்கள் தோல்வியடைந்தால் அந்தத் தோல்வியை உடனே யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சில வருடங்கள் கழித்து வேண்டுமானால், அந்தப் படம் அதனால்தான் ஓடவில்லை, இதனால்தான் ஓடவில்லை என்று காரணங்களை அடுக்குவார்கள். தோல்விகள் கூட வெற்றியின் படிக்கட்டுக்களாக மாறும் என்று பலரும் நினைப்பதில்லை.

ஹிந்தியில் வெளிவந்த ‘தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்’ படம் தோல்வியடைந்த பின் அந்தத் தோல்வியை படத்தின் நாயகன் ஆமீர்கான் ஏற்றுக் கொண்டார். அது போலவே, தெலுங்கில் பொங்கலுக்கு வெளிவந்த ‘வினய விதேய ராமா’ படத்தின் தோல்வியை அதன் நாயகன் ராம்சரண் தேஜா ஏற்றுக் கொண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், “நாங்கள் அனைவருமே உங்களை மகிழ்விக்க கடுமையாக உழைத்து படத்தை வெளியிட்டோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக எங்கள் பார்வை திரையில் சரியாக மாற்றப்படவில்லை. உங்கள் எதிர்பார்ப்புகளை எங்களால் சந்திக்க முடியவில்லை. இருப்பினும் உங்களது மகத்தான அன்பு, என்னை அர்ப்பணிப்புடன் மேலும் கடுமையாக உழைக்கத் தூண்டும். உங்கள் எதிர்பார்ப்புக்கேற்றபடி சிறந்த படங்களைக் கொடுக்க முயற்சிப்பேன்,” என்று தெரிவித்துள்ளார்.

இப்படி தோல்வியை ஏற்றுக் கொண்டு அதற்காக வருத்தம் தெரிவிக்கும் அறிக்கை நம் தமிழ் ஹீரோக்களிடமிருந்து எதிர்காலத்திலாவது வருமா