
தமிழ் தொடருக்கு இந்திய அளவில் கிடைத்த வரவேற்பு – 100 மில்லியன் வாட்ச் ஹவர்ஸை கடந்த ‘ரிசார்ட்’!
சென்னை, ஆகஸ்ட் 18, 2026:
தமிழில் உருவாகும் வெப்சீரிஸ்கள் பெரும்பாலும் தமிழ் ரசிகர்களை மையமாகக் கொண்டே பார்க்கப்படும் நிலையில், அந்த எல்லையைத் தாண்டி மற்ற மொழி ரசிகர்களிடமும் கவனம் பெற்றிருக்கிறது ஜியோஹாட்ஸ்டாரின் ‘ரிசார்ட்’ தொடர்.
ஜியோஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் இந்த நீண்டகால தமிழ் ஒரிஜினல் தொடர், தற்போது 100 மில்லியன் வாட்ச் ஹவர்ஸை கடந்துள்ளது. அந்தத் தளத்தில் இந்த அளவிலான பார்வை நேரத்தைப் பெற்ற முதல் பிக்ஷன் ஒரிஜினல் தொடராகவும் ‘ரிசார்ட்’ புதிய சாதனையைப் படைத்துள்ளது.
இந்த சாதனையில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், ‘ரிசார்ட்’ தொடரை தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி, பிற மொழி ரசிகர்களும் அதிக அளவில் பார்த்திருப்பதுதான். தொடரின் மொத்த பார்வை நேரத்தில் 53 சதவீதம் தமிழக பார்வையாளர்களிடமிருந்து கிடைத்துள்ள நிலையில், மீதமுள்ள 47 சதவீதம் தமிழகத்திற்கு வெளியிலிருந்து கிடைத்துள்ளது.
அதில் குறிப்பாக, 22 சதவீத பார்வை நேரம் இந்தி ரசிகர்களிடமிருந்தும், 15 சதவீதம் தெலுங்கு ரசிகர்களிடமிருந்தும், 10 சதவீதம் மலையாளம் மற்றும் கன்னட ரசிகர்களிடமிருந்தும் கிடைத்துள்ளது. இதன் மூலம், ஒரு குறிப்பிட்ட மொழியில் உருவாகும் கதை, அந்த மொழியைத் தாண்டியும் ரசிகர்களை சென்றடைய முடியும் என்பதற்கு ‘ரிசார்ட்’ நல்ல உதாரணமாக மாறியுள்ளது.
தொடரின் இந்த வரவேற்புக்கு அதன் கதைக்களமும் கதாபாத்திரங்களும் முக்கிய காரணமாக அமைந்துள்ளன. எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய கதாபாத்திரங்கள், குடும்பம் மற்றும் உறவுகளைச் சுற்றியுள்ள உணர்வுப்பூர்வமான தருணங்கள், தொடர்ந்து வெளியாகும் புதிய எபிசோடுகள் என ‘ரிசார்ட்’ தொடர் பார்வையாளர்களை தொடர்ந்து தன்னுடன் பயணிக்க வைத்துள்ளது.
குறிப்பாக, ஜியோஹாட்ஸ்டார் தற்போது தென்னிந்தியாவில் அதிக கவனம் செலுத்தி வரும் ‘Long Running Shows’ என்ற அணுகுமுறைக்கும் ‘ரிசார்ட்’ கிடைத்திருக்கும் வரவேற்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. வாரந்தோறும் புதிய எபிசோடுகள் வெளியாகும் வகையில் உருவாக்கப்படும் இந்த தொடர்கள், ஒரே முறையில் கதையை முடித்துவிடாமல், நீண்ட காலத்திற்கு பார்வையாளர்களை தொடருடன் இணைத்து வைக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளன.
இதுகுறித்து ஜியோஸ்டாரின் சவுத் கிளஸ்டர் என்டர்டெயின்மென்ட் பிசினஸ் பிரிவின் தலைவர் கிருஷ்ணன் குட்டி கூறும்போது, “‘ரிசார்ட்’ 100 மில்லியன் வாட்ச் ஹவர்ஸை கடந்துள்ளது எங்களுக்கு மிக முக்கியமான சாதனை. குறிப்பாக, நீண்டகால ஒரிஜினல் தொடர்களில் நாங்கள் மேற்கொண்டு வரும் முதலீட்டுக்கும் இது கிடைத்துள்ள வலுவான அங்கீகாரம். தொடர்ந்து பார்வையாளர்களுடன் பயணிக்கும் வகையில் உருவாக்கப்படும் கதைகள் நீண்ட காலத்திற்கு ரசிகர்களை ஈர்க்கும் என்ற நம்பிக்கையை ‘ரிசார்ட்’ உறுதிப்படுத்தியுள்ளது,” என்றார்.
மேலும், “இந்தத் தொடரின் மொத்த பார்வை நேரத்தில் கிட்டத்தட்ட பாதி தமிழ் மொழிக்கு வெளியிலிருந்து கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. நல்ல கதைகளுக்கு மொழி எல்லைகள் தடையாக இருக்காது என்பதையும் இது காட்டுகிறது. தென்னிந்தியா முழுவதும் எங்களது ‘Long Running Shows’ பட்டியலை தொடர்ந்து விரிவுபடுத்துவதுடன், உள்ளூர் ரசிகர்களுடன் வலுவாக இணையும் அதே நேரத்தில் நாடு முழுவதும் கவனம் பெறக்கூடிய கதைகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்துவோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.
பிரவீன் பென்னட் இயக்கியுள்ள ‘ரிசார்ட்’ தொடரில் விஜய் குமார் ராஜேந்திரன் கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலரும் இதில் நடித்துள்ளனர்.
ஆர்ஆர் ரிசார்ட்டில் ஹவுஸ்கீப்பிங் ஊழியராக பணியாற்றும் வெற்றி, சமையல் கலைஞராக வேண்டும் என்ற கனவுடன் வாழ்கிறார். அந்த ரிசார்ட்டைச் சுற்றியுள்ள மனிதர்கள், உறவுகள், ஆசைகள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் வெற்றியின் வாழ்க்கை எவ்வாறு நகர்கிறது என்பதே தொடரின் மையக்கதை.
தமிழில் உருவான ‘ரிசார்ட்’ தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஜியோஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியாகி வருகிறது.
இந்தத் தொடருக்கு டிடிகே பிரஸ்டீஸ் கோ-பிரசன்டிங் ஸ்பான்சராகவும், லலிதா ஜூவல்லரி மார்ட், காலீஸ்வரி ரிஃபைனரி மற்றும் பிரபாஸ் விகேர் ஹெல்த் கிளினிக் ஆகியவை ஸ்பெஷல் பார்ட்னர்களாகவும் இணைந்துள்ளன.
ஆதாரம்: ஜியோஹாட்ஸ்டார் உள்நிலை தரவுகள்.

Tamil Original ‘Resort’ Crosses 100 Million Watch Hours on JioHotstar, Wins Audiences Beyond Tamil Nadu
Chennai, August 18, 2026:
While Tamil web series are traditionally expected to appeal primarily to Tamil-speaking audiences, JioHotstar’s Tamil original series ‘Resort’ is breaking that barrier by attracting viewers from across multiple language markets.
The long-running Tamil original has crossed an impressive 100 million watch hours on JioHotstar, becoming the first fiction original series on the platform to achieve this milestone.
What makes the achievement particularly significant is the strong response the series has received from audiences beyond Tamil Nadu. While 53% of the show’s total watch time comes from viewers in Tamil Nadu, the remaining 47% comes from audiences outside the state.
Among the non-Tamil audiences, Hindi viewers account for 22% of the total watch time, Telugu viewers contribute 15%, while Malayalam and Kannada audiences together account for 10%. The numbers highlight how a story rooted in one language can successfully connect with audiences across linguistic boundaries.
The show’s relatable characters, emotional storytelling and steady release of new episodes have helped ‘Resort’ build a loyal audience since its premiere. Rather than relying solely on a short-format narrative, the series keeps viewers engaged through an evolving storyline and characters that audiences can connect with over time.
The success of ‘Resort’ also underlines JioHotstar’s growing focus on its ‘Long Running Shows’ strategy. The format is designed around regular episode releases, encouraging audiences to stay connected with a show for an extended period rather than consuming the entire story in a short span.
Commenting on the milestone, Krishnan Kutty, Head – South Cluster Entertainment Business, JioStar, said that the 100 million watch-hour mark is a significant achievement for JioHotstar and a strong validation of its investment in long-running original content.
He further noted that the fact that nearly half of the show’s total watch time has come from audiences outside the Tamil-speaking market reinforces the belief that good, authentic stories can travel beyond language and geographical boundaries.
Directed by Praveen Bennett, ‘Resort’ stars Vijay Kumar Rajendran in the lead role, along with Thalaivasal Vijay and others.
The series revolves around Vetri, a housekeeping employee at RR Resort who dreams of becoming a chef. His journey unfolds against the backdrop of the resort, where ambitions, relationships and everyday challenges shape the course of his life.
‘Resort’ is available exclusively on JioHotstar in Tamil, Telugu, Hindi, Malayalam and Kannada.
The series has TTK Prestige as its Co-Presenting Sponsor, while Lalitha Jewellery Mart, Kaliswari Refinery and Prabhas Vcare Health Clinic have joined as Special Partners.
Source: JioHotstar internal data.
About JioHotstar
JioHotstar is one of India’s leading streaming platforms, created through the combination of JioCinema and Disney+ Hotstar. With compelling storytelling and innovative technology, JioHotstar aims to redefine entertainment for audiences across India.
