Friday, April 17
Shadow

நடிகர் அஜீத் நடிக்கும் ‘தல 60’ படத்தின் புதிய தகவல் வெளியீடு

நடிகர் அஜீத் நடிக்கும் ‘தல 60’ படத்தில் அவரது கேரக்டர் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

மங்காத்தா, என்னை அறிந்தால் படங்களுக்கு பின்னர் மூன்றாவது முறையாக அஜீத் தல 60 படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் அஜீத் தமிழ்நாட்டு நீச்சல் வீரர் குற்றாலிஸ்வரனை சந்தித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தீரன் அதிகாரம் ஒன்று படத்தை தயாரித்த இயக்குனர் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிக்கும் படம் தல 60. இந்த படத்தின் சூட்டிங் 29ம் தேதி தொடங்கும் என்று தெரிகிறது. தொடர்ந்து செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் படப்பிடிப்பு நடக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் 2020ம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட்ட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த படத்தை புத்தபெஸ்ட், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் படமாக்கவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.