
தளபதி விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி இருந்த மெர்சல் படத்தை அடுத்து தன்னுடைய தளபதி-62 படத்திற்காக ஏ.ஆர்.முருகதாஸுடன் கூட்டணி அமைத்துள்ளார். தொடர்ந்து இரண்டு மாபெரும் வெற்றியை கொடுத்த இந்த கூட்டணி மீண்டும் இணைந்தது ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது
தொடர்ந்து இரண்டு படங்களையும் நூறு கோடி கிளப்பில் இணைத்த பெருமை முருகதாஸ் மட்டுமே உண்டு அதுவும் தளபதியை வைத்து இந்த கூட்டணியின் மூன்றவது வெற்றி நிச்சயம் வேண்டும் என்பதற்காக இயக்குனர் முருகதாஸ் மாபெரும் திட்டம் தீட்டி வெளிசெய்துவருகிறார்
இந்த படத்திற்கு மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மானே இசையமைக்க தொடங்கி விட்டார், மேலும் ஒரு பாடலுக்கு இசையமைத்தும் முடித்து விட்டார்.
அதோடு ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை ஜனவரி அல்லது பிப்ரவரியில் தொடங்கி ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குள் முடித்து விட பலே திட்டம் தீட்டியுள்ளார்.
