
சர்கார் படத்துக்குப் பிறகு அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் நடிகர் விஜய். இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிகர் யோகி பாபு, விவேக் ஆகியோரும், வில்லன் கதாபாத்திரத்தில் ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி ஆகியோரும் நடிக்கின்றனர்
விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் கதிர் இடம்பெற்றுள்ளார். மேலும் இந்தப் படத்தில் விஜய் ஒரு கால்பந்து பயிற்சியாளராக இருப்பதாகவும், படத்தின் சில பகுதிகள் அமெரிக்காவில் எடுக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் படத்தின் முதல் பாடல் ஷூட்டிங் முடிவடைந்திருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படக்குழுவினர் கருத்துபதிவிட்டுள்ளனர்.
