Wednesday, October 28
Shadow

தளபதி விஜய் தயாரிக்கும் படம் இயக்குனர் ஹீரோ யார் தெரியுமா

சமீபகாலமாக ஒரு படம் நடித்து கொண்டு இருக்கும் போதே அடுத்த படத்தின் அறிவிப்பு வந்து விடும் ஆனால் அட்லி படத்துக்கு அடுத்த படத்தின் இயக்குனர் யார் தயாரிப்பு நிறுவனம் யார் என்று மிக பெரிய ஒரு கேள்விக்குறியாக இருந்து வருகிறது அதற்கு இப்போது விடை

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்திற்குப் பிறகு விஜய் இயக்க உள்ள படம் பற்றி பல்வேறு விதமான தகவல்கள் வெளிவந்தன. கடந்த சில நாட்களாக ‘மாநகரம், கைதி’ படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் அடுத்த விஜய் படத்தின் இயக்குனர் என உறுதியான தகவல் போல செய்திகள் வெளியாகின. அது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்ட ஒன்று என சினிமா வட்டாரங்களிலும் தெரிவிக்கிறார்கள்.

மற்ற இயக்குனர்கள் சொன்ன கதையை விட லோகேஷ் கனகராஜ் சொன்ன கதை விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டதாம். அதனால் அவரும் உடனே சரியென சொல்லிவிட்டதாகச் சொல்கிறார்கள். இந்தப் படத்தை விஜய்யின் சொந்தப்பட தயாரிப்பு நிறுவனமே தயாரிக்கும் என்கிறார்கள்.

விஜய்யின் ஆரம்ப காலத்தில் அவருடைய உறவினரான பிரிட்டோ என்பவரது பெயரில் தொடங்கப்பட்ட நிறுவனமான பிவி கம்பைன்ஸ் நிறுவனம் சார்பில் இந்தப் படத்தைத் தயாரிக்க இருக்கிறார்களாம். இந்த நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடித்த படங்கள் ‘ரசிகன், செந்தூரபாண்டி’.

பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்த நிறுவனம் சார்பில் படத் தயாரிப்பில் இறங்குகிறார்கள். விஜய்யின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருந்தவர்தான் பிரிட்டோ.

இந்தப் புதிய படத்தை ’96’ படத்தை வெளியிட்ட 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனமும், விஜய்யின் மேனேஜரான ஜெகதீஷும் லைன் தயாரிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்களா