தளபதி விஜய் தயாரிக்கும் படம் இயக்குனர் ஹீரோ யார் தெரியுமா
சமீபகாலமாக ஒரு படம் நடித்து கொண்டு இருக்கும் போதே அடுத்த படத்தின் அறிவிப்பு வந்து விடும் ஆனால் அட்லி படத்துக்கு அடுத்த படத்தின் இயக்குனர் யார் தயாரிப்பு நிறுவனம் யார் என்று மிக பெரிய ஒரு கேள்விக்குறியாக இருந்து வருகிறது அதற்கு இப்போது விடை
விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்திற்குப் பிறகு விஜய் இயக்க உள்ள படம் பற்றி பல்வேறு விதமான தகவல்கள் வெளிவந்தன. கடந்த சில நாட்களாக 'மாநகரம், கைதி' படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் அடுத்த விஜய் படத்தின் இயக்குனர் என உறுதியான தகவல் போல செய்திகள் வெளியாகின. அது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்ட ஒன்று என சினிமா வட்டாரங்களிலும் தெரிவிக்கிறார்கள்.
மற்ற இயக்குனர்கள் சொன்ன கதையை விட லோகேஷ் கனகராஜ் சொன்ன கதை விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டதாம். அதனால் அவரும் உடனே சரியென சொல்லிவிட்டதாகச் சொல்கிறார்க...
