Thursday, June 25
Shadow

தரமணி – திரைவிமர்சனம் ( தங்கரதம் )Rank 4.5/6

தமிழ் சினிமாவில் நல்ல சிந்தனைகளையும் நல்லகதைகளையும் தமிழ் சினிமா ரசிகர்கள் என்றும் கைவிட்டது இல்லை என்பது நாம் அறிந்த விஷயம் அதே போல தமிழ் சினிமாவில் தொடர்ந்து நல்ல கருத்துகளையும் சமுதாயா அக்கறையும் காண்பிக்கும் ஒரு சில இயக்குனர்களில் ஒருவர் நம்ம இயக்குனர் ராம் என்று சொல்லலாம் காரணம் அவரின் முதல் படத்தில் இருந்து தற்போது ரிலீஸ் ஆகியிருக்கும் தரமணி படம் வரை அதை நிருபித்து வருகிறார் அதில் வெற்றியும் பார்த்து வரும் இயக்குனர் என்றும் சொல்லலாம்.

எந்த ஒரு படமாக இருந்தாலும் அதை மிகவும் நேர்த்தியாக கொடுப்பவர் ராம் காதலாக இருக்கட்டும் அப்பா மகள் உறவாக இருக்கட்டும் அதில் ஒரு நேர்த்தி உண்மை கலந்த ஒரு சிறப்பான கதை இருக்கும் ராமின் படங்களில் எல்லோரும் பிரமாண்டம் என்று போகும் காலத்தில் தனக்கு என ஒரு பாதையை வகுத்தவர் அன்று K. பாலச்சந்தர் அவர் வழியில் சிறந்த கதையை படம் பண்ணி அதில் விருதுகளும் வாங்கி அதே நேரத்தில் வர்த்தக ரீதியாகவும் வெற்றி கொடுக்கும் ஒரு இயக்குனர் என்று பெருமையாக சொல்லலாம்.

இப்படி பட்ட ஒரு இயக்குனர் இன்று அதாவது குடும்ப நல கோர்ட் போனால் எத்தனை ஜோடிகள் அங்கு தவம் இருகிறார்கள் எதற்கு தெரியுமா விவாகரத்து என்ற ஒரு விஷயத்துக்கு அப்படி பிரிந்த இரண்டு ஜோடிகளின் கதை தான் இந்த தரமணி என்று சொல்லலாம் காதல் பெண்மை கோவம் பெண்ணின் சுதந்திரம் பெண் புரட்சி குழந்தை பாசம் இப்படி ஒருகலவை தான் தரமனியின் கதை என்றும் சொல்லலாம். சரி வாங்க படத்தின் கதையை பார்ப்போம்.

கட்டமரன் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் ராமின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தில் ஆண்ட்ரியா, வசந்த் ரவி, அழகம் பெருமாள், அஞ்சலி மற்றும் பலர் நடிப்பில் ஜெ.எஸ்.கே பிலிம்ஸ் கார்பரேஷன் வெளியிட்டுள்ள படம் தான் தரமணி.

கதைப்படி கணவனை பிரிந்து மகனுடன் மாடன் பெண்ணாக வாழ்ந்து வருகிறார் ஆண்ட்ரியா, அதே போல வசந்த் ரவியின் தனது காதலியான அஞ்சலியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் ஆண்ட்ரியாவும் வசந்த் ரவியும் எதிர்பாராத விதமாக சந்தித்து நண்பர்களாகி விடுகின்றனர், பின்னர் நட்பு நாளடைவில் காதலாகி விடுகிறது.

இதனையடுத்து சேர்ந்து வாழ்ந்து வந்த இவர்கள் இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டு பிரிந்து விடுகிறார்கள், இந்நிலையில் மீண்டும் அஞ்சலி வசந்த் ரவியின் வாழ்க்கையில் வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்தார்களா? இல்லை மீண்டும் ஆண்ட்ரியாவுடன் சேர்ந்தாரா? ஹீரோவின் வாழ்க்கை என்னவானது என்பது தான் படத்தின் மீதி கதை.

ஆண்ட்ரியா இந்த படத்தில் ஒரு பையனுக்கு அம்மாவாக நடித்துள்ளார், அம்மா கதாபாத்திரத்தில் தன்னுடைய நடிப்பை அருமையாக வெளிக்காட்டி உள்ளார், ரசிகர்களின் மனதை கவரும் அளவில் அழகாகவும் ஸ்டைலாகவும் நடித்துள்ளார். கவர்ச்சி நடிகையாக பார்த்த நமக்கு இவர் இந்த படம் மூலம் தமிழ் சினிமாவில் மிக சிறந்த நடிகையாக எல்லோருக்கும் தெரிவார் அதோடு இவருக்குள் இப்படி ஒரு திறமை இருக்கு என்பதை மிக அழகா வெளிபடுத்தியுள்ளார் இயக்குனர் ராம்

இந்த படத்தின் மூலமாக கதாநாயகனாக திரையுலகில் கால் பதிக்கும் வசந்த் ரவி அவரது நடிப்பை அழகாகவே கொடுத்துள்ளார், ஒவ்வொரு காட்சிகளுக்கும் ரசிக்கும் விதத்தில் கவிதைகளால் படத்தை அலங்கரித்துள்ளார், முதல் படம் என்பது போல இல்லாமல் அனுபவம் உடைய நடிகர் போலவே தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆண்ட்ரியாவின் மகனாக நடித்துள்ள சிறுவன் ஆண்ட்ரியனும் (Adrian) படத்தில் அருமையாகவும், அழகாகவும், சுட்டி தனமாகவும், அனைவரும் ரசிக்கும் படியும் நடித்துள்ளான்.

அஞ்சலி மிக சிறந்த நடிகை என்பதை அவர் பல படம் மூலம் நிருபித்துள்ளார் மீண்டும் தனக்கு தன் குருநாதர் கொடுத்த வாய்ப்பை மிக அழகா நேர்த்தியாக பயன்படுத்தியுள்ளார். அஞ்சலி இந்த படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், சவாலான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது பாராட்ட வேண்டிய விஷயம் இனி இவரை கவர்ச்சி நாயகி என்ற கோணத்தில் பார்க்காமல் நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு இயக்குனர்கள் பயன்படுத்துவார்கள்.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் விதத்தில் அற்புதமாக அமைந்துள்ளன. மேலும் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்துமே ரசிக்கும் படியாகவே உள்ளது. இந்த படத்திற்கான பாடல்களை நா. முத்துக் குமார் கவிதை வடிவில் அருமையாக எழுதியுள்ளார், கேட்பவர்கள் மனதை இதமாக்கும் வகையில் பாடல்கள் அமைந்துள்ளன.

படத்திற்கு ஒளிப்பதிவை தேனீ ஈஸ்வர் தேவையான அளவில் கட்சித்தமாக செய்து கொடுத்துள்ளார், அதே போல் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தும் அவரது பணியை அழகாக செய்துள்ளார்.

மொத்தத்தில் தரமணி தமிழ் சினிமாவின் தரம் Rank 4.5/6

Leave a Reply