
“விஷமயமான உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் ‘தி இந்தியா ஸ்டோரி’… விரைவில் டீசர் வெளியீடு!”
சமூகத்தில் அமைதியாக பரவி வரும் ஒரு ஆபத்தான நிஜத்தை திரை மொழியில் பதிவு செய்யும் முயற்சியாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி இந்தியா ஸ்டோரி : ஸ்லோ பாய்சன் இன் ப்ராக்ரஸ்’. ஏற்கனவே வெளியான இப்படத்தின் தாக்கம் மிகுந்த போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
முதல் முறையாக காஜல் அகர்வாலும், ஷ்ரேயாஸ் தல்படேயும் இணைந்து நடிக்கும் இந்த திரைப்படம், வழக்கமான கமர்ஷியல் கதைகளை தாண்டி, நாட்டின் பொது சுகாதாரத்தையும், விவசாய துறையையும் தீவிரமாக பாதிக்கும் ஒரு முக்கிய பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.
இயக்குநர் சேட்டன் DK இயக்கத்தில், சாகர் B. ஷிண்டே எழுதி தயாரித்துள்ள இப்படம், ரசாயன பொருட்களின் தவறான பயன்பாடு மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் மூலம் ஏற்படும் நீண்டகால பாதிப்புகளை அதிர்ச்சியூட்டும் விதமாக பேசுகிறது. குறிப்பாக விவசாயம், உணவு பாதுகாப்பு மற்றும் மனிதர்களின் உடல்நலத்தில் உருவாகும் மறைமுகமான ஆபத்துகளை இப்படம் நேரடியாக கேள்விக்குறியாக்குகிறது.
ஒரு குடும்பம் அல்லது தனி மனிதரின் வாழ்வை மட்டும் மையமாகக் கொள்ளாமல், நாடு முழுவதும் எண்ணற்ற மக்களை பாதிக்கும் அமைதியான பேராபத்தை இப்படம் சுட்டிக்காட்டுகிறது. தொழில் துறை அலட்சியம், கட்டுப்பாடற்ற ரசாயன பயன்பாடு மற்றும் அதற்கெதிரான விழிப்புணர்வு பற்றாக்குறை போன்ற விஷயங்களை, சினிமா மொழியில் வலுவாக பதிவு செய்ய முயற்சிக்கிறது ‘தி இந்தியா ஸ்டோரி’.
விரைவில் வெளியாகவுள்ள டீசர், இந்த உலகத்தின் தீவிரத்தையும் உணர்ச்சி ஆழத்தையும் ரசிகர்களுக்கு இன்னும் நெருக்கமாக கொண்டு செல்லும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. குறிப்பாக காஜல் அகர்வாலும், ஷ்ரேயாஸ் தல்படேயும் தங்களின் வலுவான நடிப்பின் மூலம் கதையின் உணர்வுகளை ஆழமாக பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
MIG புரொடக்ஷன் & ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் வழங்கும் இந்த திரைப்படம், வருகிற ஜூலை 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
சுமித் பாகடே, அனிதா ஜாதவ், விநாயக் சைதானி, கல்பேஷ் ஷா, தேவ்யானி கொராடே மற்றும் பிரேம் ஜோஷி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர். நிஷாந்த் பக்வத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு மங்கேஷ் தாக்டே இசையமைத்துள்ளார். ஆஷிஷ் மாத்ரே படத்தொகுப்பு செய்துள்ள நிலையில், ஷகீல் அஜாமி பாடல்களை எழுதியுள்ளார். அன்மோல் பாவே ஒலி வடிவமைப்பை கவனித்துள்ளார்.
இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் உலகளவில் வெளியிடுகிறது.

“The India Story” Brings a Shocking Reality to Light… Teaser to Release Soon!
A hard-hitting film that attempts to expose a silent yet dangerous reality prevailing in society, ‘The India Story: Slow Poison in Progress’ is gearing up to make a strong impact. After the intense and thought-provoking poster generated significant attention among audiences, the makers have now officially announced that the film’s teaser will be unveiled soon.
Marking the first on-screen collaboration between Kajal Aggarwal and Shreyas Talpade, the film moves beyond conventional commercial storytelling and focuses on a socially significant issue that directly affects public health and the agricultural sector across the country.
Directed by Chettan DK and written and produced by Sagar B. Shinde, the film sheds light on the alarming consequences of chemical misuse and the long-term dangers caused by pesticide-based farming practices. It raises serious concerns about food safety, environmental impact, and the hidden health risks affecting millions of people.
Rather than limiting itself to the story of an individual or a single family, The India Story reflects a much larger crisis silently impacting countless lives nationwide. Through a powerful cinematic narrative, the film aims to spotlight industrial negligence, uncontrolled chemical exposure, and the urgent need for greater awareness and accountability.
The makers believe the upcoming teaser will offer audiences a deeper and more intense glimpse into the film’s emotionally charged world. Kajal Aggarwal and Shreyas Talpade are expected to deliver compelling performances that bring emotional depth and realism to the narrative.
Presented by Zee Studios in association with MIG Production & Studios, the film is scheduled for a worldwide theatrical release on July 24.
The film is co-produced by Sumit Bagade, Anita Jadhav, Vinayak Saidani, Kalpesh Shah, Devyani Khorate, and Prem Joshi. Cinematography is handled by Nishant Bhagwat, with music composed by Mangesh Dhakde. Editing is by Ashish Mhatre, lyrics are penned by Shakeel Azami, and sound design is by Anmol Bhave.
The India Story: Slow Poison in Progress will release in Hindi, Tamil, and Telugu languages worldwide through Zee Studios.
