Tuesday, April 16
Shadow

“போலியான இணையத்தளங்களில் திரைப்படங்கள் வெளியாவதை முற்றிலுமாக தடுக்க வேண்டும்- வெங்கட் பிரபு

சினிமா – ஒரு கலை உலகம். அந்த கலை உலகத்தில் தமிழ் திரைப்படங்களுக்கு என்றுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது….வித்தியாசமான கதைக்களங்களை கொண்டு தனித்துவமான திரைப்படங்களை உருவாக்கி வரும் பல உன்னத படைப்பாளிகளே அதற்கு முக்கிய காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால் இன்றைய இணையத்தள உலகில் அவர்களின் படைப்புகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்பது தான் உண்மை. இனி தமிழ் திரைப்படங்ளை இணையத்தளங்களில் வெளியாகாமல் பாதுகாக்க புதியதொரு முயற்சியை மேற்கொண்டுள்ளது, ‘ஃபிரெண்ட் எம் டி எஸ்’ நிறுவனம். இதன் ஆரம்பக்கட்டமாக, எப்படி திரைப்படங்களை போலியான இணையதளங்களில் வெளிவராமல் பாதுகாக்கலாம் என்பதை பற்றிய கருத்தரங்கம், 15.11.16 அன்று சென்னையில் உள்ள ‘மை பார்டூன்’ ஹோட்டலில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் இயக்குநர் வெங்கட் பிரபு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் துணை தலைவர் பி எல் தேனப்பன், ‘ஃபிரெண்ட் எம் டி எஸ்’ நிறுவனத்தின் துணை தலைவர் பால் ஹேஸ்டிங்ஸ், ‘ஃபிரெண்ட் எம் டி எஸ்’ நிறுவனத்தின் இந்திய பங்குதாரர் ராகுல் நேரா மற்றும் அந்த நிறுவனத்தின் குழுவினரும் பங்குபெற்றது குறிப்பிடத்தக்கது.

மொழிகளை கடந்து எல்லா தரப்பு ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்ற ‘பிங்க்’ திரைப்படத்தோடு இணைந்து பணியாற்றிய ‘ஃபிரெண்ட் எம் டி எஸ்’ நிறுவனம், தற்போது வெங்கட் பிரபுவின் ‘சென்னை 28 – II’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைக்கிறது.

” ‘ஃபிரெண்ட் எம் டி எஸ்’ நிறுவனத்தோடு நாங்கள் கைக்கோர்த்து இருப்பது எங்கள் ஒட்டுமொத்த சென்னை 28 – II குழுவினருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது…. தமிழ் திரையுலகில் முதல் முறையாக இத்தகைய டிஜிட்டல் தொழில்நுட்பம் எங்களின் சென்னை 28 – II மூலமாக அறிமுகமாக இருப்பது எங்களுக்கு பெருமையும் கூட….ஒரு படைப்பாளியின் படைப்பை அதிக அக்கறை கொண்டு பாதுகாக்க வேண்டும் என்பது தான் இந்த ‘ஃபிரெண்ட் எம் டி எஸ்’ நிறுவனத்தின் ஒரே எண்ணம்….நிச்சயமாக அவர்கள் தமிழ் திரையுலகிற்கு ஒரு பாதுகாப்பு கவசமாக இருப்பார்கள் என்று முழுமையாக நம்புகிறேன்….” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.

Leave a Reply