
ஒரு மாதத்திற்கு முன்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் பல்வேறு பிரச்சினைகளுக்காக வேலை நிறுத்தம் என்று தன்னிச்சையாக அறிவித்ததற்காக, இதே திரையரங்கு உரிமையாளர்கள்தான் கொதித்தெழுந்தார்கள்.
ஜி.எஸ்.டி. வரி அமலாகும் தேதி 4 மாதங்களுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டுவிட்டது. தமிழக அரசு கேளிக்கை வரியை நீக்குமா? நீக்காதா என்பதை கேட்டுத் தெரிந்து கொள்வதற்கு நமது சினிமா அமைப்புகளுக்கு இத்தனை மாதங்கள் ஆகியிருக்கிறது..
இன்னும்கூட உறுதியான தகவலை அவர்களிடமிருந்து பெற முடியவில்லையெனில் தியேட்டர் சங்க நிர்வாகிகளின் கடும் உழைப்பை நம்மால் உணர முடிகிறது..!
இத்தனை நாட்கள் பொறுமையாய் காத்திருந்துவிட்டு இப்போது திட்டம் அமலாகும் முதல் நாளில் திடுதிப்பென்று ஸ்டிரைக் அறிவித்திருப்பது மட்டும் நியாயமா..?
இப்போது மட்டும் தியேட்டர் சங்க நிர்வாகிகள் யாரிடம் கலந்தாலோசித்து இந்த முடிவை எடுத்தார்கள்..?
எங்க சொத்து.. நாங்க அறிவிப்போம் என்று அவர்கள் நினைத்தால் இது மட்டும் எதேச்சதிகாரமில்லையா..? தயாரிப்பாளர்கள் படமெடுக்காவிட்டால், இவர்கள் தியேட்டரை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்வார்கள்..?
இப்படி திடுதிப்பென்று கடைசி நாளில் அரசின் கவனத்தை ஈர்க்க, வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருப்பது நியாயம்தானா..?
முதலில் ஒரு மாத காலம் அவகாசம் கொடுத்து அரசிடம் கோரிக்கை வைத்துவிட்டு பின்பு அது முடியாமல் போயிருந்து ஸ்டிரைக்கை அறிவித்திருந்தால் அது நியாயமானது.
இப்போது இந்த திடுதிப் ஸ்டிரைக்கினால் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி தயாரித்து இந்த வாரம் படத்தை ரிலீஸ் செய்திருக்கும் தயாரிப்பாளர்களும், விநி்யோகஸ்தர்களும் என்ன ஆவார்கள்..? அவர்களுக்கு ஏற்படும் நஷ்டத்திற்கு யார் பொறுப்பேற்பது..?
ஸ்டிரைக் முடிந்து அடுத்து மீண்டும் இதே படங்களை திரையிட தியேட்டர்கள் கிடைக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்..?
பாதியிலேயே நின்று போன படங்களுக்கு மீண்டும் கூட்டத்தை வரவழைக்க முடியுமா..? கொஞ்சமாவது யோசித்திருக்க வேண்டாமா..?
விஷால் ஸ்டிரைக் அறிவித்தபோது இதே தியேட்டர்காரர்கள்தான் எங்களது தியேட்டரில் வேலை பார்ப்பவர்களுக்கு யார் சம்பளம் கொடுப்பது..? தியேட்டர்களை மூடினால் எங்களது வருமானத்திற்கு என்ன வழி என்று கத்தினார்களே..? இப்போது அந்த வசனம் எங்கே போனதாம்..?
ஒரு தனி மனிதனை பழிவாங்கும் போக்கு தான் இந்த ஸ்ட்ரைக் என்று சொல்லணும் அன்று இதே பிரச்சனையை விஷால் கருத்தில் கொண்டு இந்த ஸ்ட்ரைக்கை அறிவித்தபோது இந்த அபிராமி ராமநாதன் மற்றும் சில புல்லருவிகள் தானே ஜால்ரா அடித்து அன்று விஷால் அறிவித்த ஸ்ட்ரைக்கை புறக்கணித்தனர் இன்று
திரையரங்கு உரிமையாளர்களுக்கு வந்தால் ரத்தம்.. தயாரிப்பாளர்களுக்கு வந்தால் தக்காளி ஜூஸா..