
தமிழ் சினிமாவில் காலத்தால் அழிக்க முடியாத பெருமை என்றால் அது சிலருக்கு உண்டு அந்த வரிசையில் முக்கிய இடம் கொண்டவர் என்றால அது அன்றைய தமிழ் சினிமாவின் சகலகலாவல்லவன் நாகேஷ் என்று தான் சொல்லணும் இவர் சிறந்த நகைசுவை நடிகர் மட்டும் இல்லை அன்று சினிமாவில் பல அவதாரம் எடுத்தவர் ஹீரோ வில்லன் பாடகர் குணசித்திர நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என பல அவதாரம் எடுத்தவர்.
சினிமாவில் அதிகமாக சம்பாதித்து ஆனால் அதை சினிமாவில் விட்ட ஒரு சில நபர்களில் இவரும் ஒருவர் என்று சொல்லலாம் ஒரு நாளைக்கு 24மணி நேரமும் உழைத்து சம்பாதித்த காசை தயாரிப்பாளர் என்ற அவதாரம் மூலம் பல நஷ்டங்கள் கண்டவர் நாகேஷ் அப்படி பட்டவர் கடைசியாக அவருக்கு கிடைத்த சொத்து என்பதை விட அவரின் கனவு ஒரு திரையரங்கம் கட்டவேண்டும் என்று அதன் படி சென்னை தி நகரில் அவருக்கு சொந்தமான இடத்தில் நாகேஷ் திரையரங்கம் என்று கட்டினார் அதை அன்றைய முதல்வர் அவரின் நண்பர் எம்ஜிஆர் திறந்து வைத்தார்.
அவர் சினிமாவில் சம்பாதித்த சொத்துகள் ஏனோ அவருக்கு அவருக்கு கை கொடுக்கவில்லை என்று தான் சொல்லணும் காரணம் அவரின் வாரிசுகளும் ஒரு காரணம் என்று சொல்லுவார்கள். இருந்தாலும் அந்த திரையங்க பெயரும் காலத்தால் அழிக்க முடியாத ஒன்று என்று தான் சொல்லணும்.
தற்போது நாகேஷ் திரையரங்கம் என்ற பெயரில் ஒரு படம் உருவாகிவருகிறது இந்த படத்தில் நடிகர் ஆரி நடிகை ஆஷ்னா சாவேரி மற்றும் பலர் நடிப்பில் ஐசக் இயக்கத்தில் ட்ரான்ஸ் இந்தியா என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறாகள் இந்த ப்படத்தின் கதை ஒரு திரையரங்கத்தில் நடக்கும் ஒரு பேய் கதை தான் தமிழ் சினிமாவில் பேய் கதை பலகோணத்தில் எடுத்துள்ளனர் . செல் போன்யில் பேய் இப்படி பல விதத்தில் எடுத்துள்ளனர். இந்த கதை திரையரங்கத்தில் பேய் அதுனால் காலத்தால் அழிக்க முடியாத நடிகரின் பெயரில் இருந்த திரையரங்க பெயரில் எடுக்கலாம் என்று நல்ல முயற்சியில் தான் இயக்குனர் ஐசக் திட்டமிட்டு எடுத்துள்ளார்.
அதோடு இந்த திரையரங்கம் மூடி எட்டு வருடங்கள் மேல் ஆகிறது இந்த சூழ்நிலையில் நடிகர் நாகேஷ் மகன் நடிகர் ஆனந்த் பாபு இந்த படத்தில் டைட்டில்காக இந்த படத்தின் மீது வழக்கு தொடுத்துள்ளார் இது எந்த அளவில் நியாயம் என்று தெரியவில்லை சினிமாவில் மூன்று தலைமுறையாக இருக்கும் நாகேஷ் குடும்பத்தார் இப்படி செய்யலாமா ஒரு தயாரிப்பாளராக நடிகர் நாகேஷ் எவ்வவளவு சிரமம் இருக்கும் என்று அவருக்கு தெரியும் அப்படி பட்டவர் இப்படி ஒரு வழக்கு போடலாமா அது மட்டும் இல்லாமல் இந்த படம் ஆரம்பிக்கும் போதே இந்த படத்தின் டைட்டில் சொல்லிவிட்டு தான் படத்தை ஆரம்பித்தனர் அப்போ எதுவும் செய்யாமல் இப்ப படம் ரிலீஸ்க்கு தாயாராக இருக்கும் நேரத்தில் வழக்கு தொடுப்பது நியாமா சினிமாவில் இருப்பவர்கள் இப்படி செய்யலாமா