Monday, April 20
Shadow

சுரேஷ் சண்முகம் இயக்கத்தில் “திருப்பதிசாமி குடும்பம் “

ஜே.ஜே.குட் பிலிம்ஸ் பாபுராஜா, ஜெம்ஸ் பிலிம்ஸ் முருகானந்தம் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ திருப்பதிசாமி குடும்பம் “ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் ஜே.கே, ஜாகீன் என்கிற இரண்டு கதாநாயகர்கள் அறிமுகமாகிறார்கள். முக்கிய வேடத்தில் ஜெயன் என்பவர் அறிமுகமாகிறார். மற்றும் தேவதர்ஷினி, லஷ்மி ஐஸ்வர்யா, மயில், முத்துராமன், கே.அமீர், சிசர்மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஒரு நடுத்தர குடும்பத் தலைவன் திருப்பதிசாமி, கால் டாக்சி டிரைவரான திருப்பதிசாமி, அவரது மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் என சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த குடும்பத்திற்கு ஒரு சின்ன தடங்கல். திருப்பதிசாமியின் பிள்ளைகளுக்கு நடக்கும் எதிர்பாராத நிகழ்வு ஒன்று அந்த சந்தோஷக் குடும்பத்தை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதே கதை !

ஜாலியான அதே சமயம் கனமான ஒரு உணர்வையும் இந்த திருப்பதிசாமி குடும்பத்து திரைக்கதை உருவாக்கும் ! நல்ல படம் நல்ல உணர்வை ஏற்படுத்தும் படம் நிச்சயம் மக்கள் மனதில் நல்ல ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றி தரும் என்று நம்புகிறோம்.

திருப்பதிசாமி குடும்பம் அந்த வகைப் படமாக பாராட்டு பெறும் என்று நம்பிக்கையுடன் கூறினார் இயக்குனர்.

Leave a Reply