Saturday, April 18
Shadow

பொங்கலுக்கு 3 படங்கள் மட்டுமே ரிலீஸ்

ஒரு காலத்தில் பொங்கலுக்கு கிட்டதட்ட பத்து படங்களுக்கு மேல் வெளியாகும் ஆனால் இப்ப மூன்று படங்கள் இல்லை நாலு படங்கள் அதற்கே திரை அரங்கம் இல்லை என்று நீ நான் என்று போட்டி இது தமிழ் சினிமாவின் வளர்ச்சியா இல்லை எங்கே போகிறது

வரும் பொங்கல் பண்டிகைக்கு ‘பைரவா’, ‘புரியாத புதிர்’, ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’, ‘புரூஸ் லீ’, ‘குற்றம் 23’, ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’, ‘அதே கண்கள்’, ‘யாக்கை’ ஆகிய 8 படங்கள் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்போது 3 படங்கள் மட்டுமே திரைக்கு வரும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘பைரவா’, 12ம் தேதி ரிலீசா
கிறது. இதற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது. ரஞ்ஜித் ஜெயக்கொடி டைரக்‌ஷனில் விஜய் சேதுபதி, காயத்ரி நடித்த ‘புரியாத புதிர்’, 13ம் தேதி திரைக்கு வருகிறது.

இதற்கும் ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது. பார்த்திபன் இயக்கத்தில் சாந்தனு, பார்வதி நாயர் நடித்துள்ள ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’, 14ம் தேதி வெளியாகிறது. இதற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் நடித்த ‘சி 3’ படம், 26ம் தேதி ரிலீசாகிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த ‘புரூஸ் லீ’, அடுத்த மாதம் வெளியாகிறது.

Leave a Reply