
ரவி தேஜா என்பவர் தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார். இவர் சிறந்த நடிகருக்கான நந்தி விருதினைப் பெற்றார். இவர் ஐம்பது திரைப்படங்களில் நடித்துள்ளார். இவற்றில் “நீ கோசம்”, “அன்னய்யா”, “இடியட்”, “கிக்”, “டான் சீனு”, “முத்தா”, “வீரா”, “பத்ரா” உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை.
இவரது இயற்பெயர் ரவி சங்கர் ராஜு பூபதிராஜு. சென்னையில் சில ஆண்டுகள் தங்கியிருந்து திரைப்படங்களில் நடித்தார்.
