சிவநாகம் அருந்ததி அம்மன் போன்ற மிக பிரமாண்ட பக்தி படங்களை இயக்கிய கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் வெளிவரும் படம் சிவநாகம் இந்த படம் நாளை ரிலீஸ் ஆக இருக்கிறது மிக பொருள் செலவில் தயாரிக்கும் படம் இந்த படம் இந்த படத்துக்கு கிராபிக்ஸ் வேலைகள் மட்டும் கிட்டத்தட்ட 7 நாடுகளில் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் 576 பேர் பணிபுரிந்துள்ளனர் இதில் குறிப்பாக ஓர் பாம்பு 12௦ அடி உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது இதை செய்யவே பல நாட்கள் ஆகியுள்ளது அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் விஷ்ணு வரதனையும் கிராபிக்ஸில் உருவாகியுள்ளனர்.
சிவன்புகழை சொல்ல வரும் இந்த படம் நாளை வெளியாகிறது கிட்டத்தட்ட 175 திரையரங்கில் வெளியாகிறது ஏற்கனவே இந்த படத்தின் ட்ரைலர் பார்த்து மக்களிடம் நல்ல வரவேற்ப்பு உள்ள படம் என்றும் சொல்லலாம். இந்த படத்தின் பாடல்களும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது நிச்சயம் இந்த படம் ரசிகர்களுக்கு அம்மன் அருந்ததீ போல சிறந்த பக்தி படமாக கவரும் என்கிறார் இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா