
ஜெயம் ரவியுடன் ஹன்சிகா நடித்த ‘போகன்’ படம் விரைவில் திரைக்கு வருகிறது. தற்போது தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்கிறார். பட வாய்ப்புகள் குறித்து ஹன்சிகாவிடம் கேட்டபோது அவர் அளித்த பதில்….
‘‘ஒப்பந்தமான படங்களில் முழு ஈடுபாட்டுடன் நடிக்க வேண்டும். இதை மிகவும் ஒழுங்காக கடைப்பிடிக்கிறேன். மற்றபடி அந்த படம் எப்படி? அதற்கு வரவேற்பு எப்படி இருக்கும்? என்று நினைத்து மனதை குழப்பிக் கொள்ளமாட்டேன். இந்த மனதைரியம் தான் நான் சினிமாவில் நீடிக்க உதவுகிறது.
பணம் சம்பாதிப்பதைவிட, ரசிகர்களை சம்பாதிப்பது தான் முக்கியம். அதை நான் முழுமையாக பெற்றிருக்கிறேன். பேஸ்புக்கில் எனக்கு 60 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
கதை பிடித்து இருந்தால் பெரிய, சிறிய கதாநாயகன் என்று பார்க்காமல் நான் நடிக்கிறேன். கதாபாத்திரம் பிடிக்காவிட்டால் பெரிய நடிகர்கள் படம் என்றாலும் நடிக்க மாட்டேன். கதை தான் எனக்கு முக்கியம்.
போட்டி மார்க்கெட், முதல் இடம் போன்றவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை. பல படங்களில் நடிப்பதை விட நல்ல கதையாக இருந்தால் ஒரு படத்தில் நடிப்பதையே விரும்புகிறேன். சில கதாநாயகிகள் அதாவது நயன்தாரா மற்றும் த்ரிஷா கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாத்திரங்களில் நடிப்பதாக கூறுகிறார்கள். வயதான பிறகு அதுபோன்ற படங்களில் நடிப்பது பற்றி யோசிக்கலாம். எனக்கு இப்போது 25 வயது தான் ஆகிறது’’.
