Wednesday, November 18
Shadow

ஒரே இரவில் அரங்கேறும் அதிர்ச்சிச் சம்பவங்கள்… கிரைம் திரில்லராக உருவாகியுள்ள ‘மின்னும் ஓர் இரவு’ – டிரைலர் வெளியீடு!

ஒரே இரவில் அரங்கேறும் அதிர்ச்சிச் சம்பவங்கள்… கிரைம் திரில்லராக உருவாகியுள்ள ‘மின்னும் ஓர் இரவு’ – டிரைலர் வெளியீடு!

இனிகோ பிரபாகர் நடிப்பில் சிவபிரபு செல்வராஜ் இயக்கியுள்ள இப்படம் நவம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

ஒரு இரவு… காட்டுப் பகுதி… மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்கச் செல்லும் நண்பர்கள்… ஆனால், அவர்கள் எதிர்பாராத வகையில் அடுத்தடுத்து நிகழும் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் என விறுவிறுப்பான கதைக்களத்துடன் உருவாகியுள்ள திரைப்படம் ‘மின்னும் ஓர் இரவு’.

நாகர்கோவிலைச் சேர்ந்த பிரபல மருத்துவரும் தொழிலதிபருமான டாக்டர் பி. ராபர்ட் ராஜ், தனது எஸ்.பி. ராபர்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் இப்படத்தைத் தயாரித்துள்ளார். விளம்பரப் பட இயக்குநராகப் புகழ்பெற்ற சிவபிரபு செல்வராஜ் இப்படத்தின் மூலம் திரைப்பட இயக்குநராகப் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

இனிகோ பிரபாகர் கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அஞ்சு கிருஷ்ணா அஷோக் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சுப்பிரமணியம் சிவா, சத்யா, அருவி பாலா, உதயா, யாசர், ராஜன், அருவி மதன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் சென்னையில் நவம்பர் 16-ம் தேதி வெளியிடப்பட்டது. எவ்ரிடே சினிமா நெட்வொர்க்ஸ் சார்பில் குகன் சண்முகம் இப்படத்தை வரும் நவம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடுகிறார்.

படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் சிவபிரபு செல்வராஜ் கூறுகையில், “ஒரே இரவில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு பரபரப்பான கிரைம் திரில்லராக இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இரவு நேரத்தை மகிழ்ச்சியாகக் கழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் காட்டுப் பகுதிக்குச் செல்லும் நண்பர்கள், அங்கு எதிர்பாராத பல அதிர்ச்சிகரமான சம்பவங்களில் சிக்கிக் கொள்கிறார்கள். அந்தச் சூழலில் இருந்து அவர்கள் எப்படி மீள்கிறார்கள் என்பதுதான் படத்தின் மையக்கரு” என்றார்.

நடிகர் இனிகோ பிரபாகருடன் பணியாற்றிய அனுபவம் குறித்துப் பகிர்ந்துகொண்ட இயக்குநர், “படத்தின் தொடக்கத்தில் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்களாக இருந்தோம். ஆனால் படப்பிடிப்பு நிறைவடையும் நேரத்தில் நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம். இனிகோ பிரபாகர் தனது கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். படத்தின் உருவாக்கம் மட்டுமின்றி, வெளியீட்டுப் பணிகளிலும் அவர் அளித்த ஆதரவு மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்தார்.

இப்படத்திற்கு சுரேஷ்குமார் சுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரணவ் சூரஜ் இசையமைத்துள்ளார். எஸ்.என். பாசில் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். மிரட்டல் சிவா சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். தேவராஜ் கலை இயக்கத்தையும், சி. முத்து சுடலை ஒப்பனைப் பணிகளையும் கவனித்துள்ளனர். கார்த்திக் தமிழ்வாணன் ஆடை வடிவமைப்பையும், பாவிஷி பாலன் புகைப்படப் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். நிகில் முருகன் மக்கள் தொடர்புப் பணிகளைக் கவனிக்கிறார்.

ஒரே இரவில் நடக்கும் மர்மங்களும், எதிர்பாராத திருப்பங்களும் நிறைந்த ‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படம் வரும் நவம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகத் தயாராகியுள்ளது. படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிரைலரைக் காண:

 

 

Unexpected Events Unfold in a Single Night! Trailer of Inigo Prabhakar’s Crime Thriller ‘Minnum Oar Iravu’ Launched

Directed by Sivaprabhu Selvaraj and produced by Dr. P. Robert Raj, the film is all set for a theatrical release on November 27!

One night, a forest, and a group of friends looking forward to spending some memorable moments together. However, what begins as an enjoyable outing soon turns into a frightening experience as they find themselves caught in a series of unexpected and shocking incidents. This intriguing premise forms the backbone of ‘Minnum Oar Iravu’, an upcoming crime thriller starring Inigo Prabhakar in the lead role.

The film is produced by renowned Nagercoil-based doctor and entrepreneur Dr. P. Robert Raj under his banner, S.P. Robert Productions. Sivaprabhu Selvaraj, a well-known commercial filmmaker with considerable experience in advertising films, has directed the project.

Inigo Prabhakar plays the protagonist, while Anju Krishna Ashok plays the female lead. The film also features Subramaniam Siva, Sathya, Aruvi Bala, Udhaya, Yazer, Rajan, Aruvi Madhan and Pasupathi in important roles.

The much-awaited trailer of the film was unveiled at an event in Chennai on November 16. Guhan Shanmugam, under the banner of Everyday Cinema Networks, will release ‘Minnum Oar Iravu’ in theatres on November 27.

Speaking about the film, director Sivaprabhu Selvaraj said, “We have created ‘Minnum Oar Iravu’ as an engaging crime thriller that unfolds entirely over the course of a single night. A group of friends venture into a forest area with the intention of enjoying their night. However, they unexpectedly get caught up in a series of shocking incidents. Whether they manage to escape from these dangerous circumstances forms the crux of the story.”

Sharing his experience of working with Inigo Prabhakar, the director said, “When we started working on the film, we were strangers to each other. But by the time the shoot was completed, we had become close friends. Inigo Prabhakar has delivered an excellent performance in the film. His support throughout the making of the film, as well as during its release preparations, has been truly encouraging.”

On the technical front, the film has cinematography by Sureshkumar Sundaram and music composed by Pranav Sooraj. S.N. Fazil is handling the editing. Mirattal Siva has choreographed the stunt sequences, while Devaraj is the art director. C. Muthu Sudalai is in charge of makeup, Karthick Tamilvaanan has handled costume design, Bavishe Balan is the still photographer, and Nikil Murukan is overseeing the publicity and public relations.

With an intriguing storyline revolving around a mysterious night, unexpected incidents and thrilling twists, ‘Minnum Oar Iravu’ promises to offer an engaging cinematic experience. Starring Inigo Prabhakar in the lead role, the film is scheduled to hit theatres on November 27.

Watch the official trailer here: