Wednesday, October 28
Shadow

கலையரசன் நடிப்பில் “உரு” படம் வரும் ஜூன் 16ம் தேதி வெளியாகிறது

தமிழ் சினிமாவில் இன்று எல்லோராலும் கவனிக்க படும் இன்னொரு நடிகர் என்றால் அது கலையரசன் என்று சொல்லணும் காரணம் தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் கொடுத்து வருகிறார் இதனால் மினிமம் காரண்டி நடிகர் என்ற பெயரும் அவருக்கு கிடைத்துள்ளது. படத்துக்கு படம் வித்தியாசமான கதை தேர்வு தான் கலையரசன் வெற்றிக்கு வித்து என்றும் சொல்லலாம் தற்போது இவர் நடிப்பில் இருக்கும் உரு படத்துக்கு மிக பெரிய ஒரு எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது என்று தான் சொல்லணும்.

கலையரசன் தன்ஷிகா முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள ‘உரு’ திரைப்படம் வருகிற 16ஆம் தேதி வெளியாகிறது. ‘வையம் மீடியா’ நிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்திருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் விக்கி ஆனந்த் இயக்கியிருக்கிறார். இயக்குனர் கல்யாணிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விக்கி ஆனந்த் இந்த படம் குறித்து பேசும்போது, ‘‘உரு’ சைக்காலஜிக்கல் த்ரில்லர் கதையாக உருவாகியுள்ளது. இது, உரு தெரியாத ஒரு மனிதன் பற்றிய படம்! இந்த படத்தை முழுக்க கொடைக்கானலில் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் கடும் குளிர் நேரத்தில் 40 நாட்கள் இரவில் இப்படத்தின் காட்சிகளை படமாக்கியுள்ளோம். அது சவாலான விஷயமாக இருந்தது. கலையரசன், தன்ஷிகா, ‘மைம்’ கோபி என இப்படத்தில் நடித்தவர்கள் பணியாற்றியவர்கள் என எல்லோரும் ரொம்பவும் கஷ்டப்பட்டோம். அந்த கஷ்டம் எல்லாம் மறந்து போகும் விதமாக ‘உரு’ நல்ல ஒரு படமாக வந்துள்ளது’’ என்றார்.

இந்த படத்திற்கு ‘மெட்ரோ’ படத்திற்கு இசை அமைத்த ஜோஹன் இசை அமைத்துள்ளார். ‘பிச்சைக்காரன்’ பட ஒளிப்பதிவாளர் பிரசன்னா ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை இயக்கத்தை ஆண்டனி கவனித்துள்ளார்.

Leave a Reply