Monday, July 6
Shadow

V1 – திரைவிமர்சனம் Rank 3.5/5

தமிழ் சினிமாவுக்கு சிறந்த ஆண்டு இந்த ஆண்டு என்று சொல்லலாம் காரணம் மிக சிறந்த கதையம்சம் கொண்ட படங்கள் இந்த ஆண்டு வெளியானது என்று தான் சொல்லணும் அதோடு பெரும்பாலும் படங்கள் லாபத்தை கொடுத்தது என்றும் சொல்லலாம்.

குறிப்பாக சிறிய படங்கள் அதிக லாபம் சாம்பாதித்தது இந்த வருடம் என்று சொன்னால் மிகையாகது இந்த வருட ஆரம்பம் பல வெற்றிபடங்களோடு ஆரம்பித்தது அதே போல இந்த ஆண்டு இறுதியும் தமிழ் சினிமாவுக்கு பொற்காலம் என்று தான் சொல்லணும். இந்த வாரம் வெளியான எல்லா படங்களும் ரசிகர்களுக்கு மிக பெரிய ஒரு விருந்தாக அமையும் அனைத்தும் ஒவ்வொரு ஜானர். குறிப்பாக சில்லிக்கருபட்டி. பஞ்சாட்சரம், V1 போன்ற படங்கள் தான் மிக பெரிய வரவேற்ப்பு கிடைக்கும் படங்களாக அமையும்

சரி இப்ப V1 படத்தை பற்றி பார்ப்போம் வித்தியாசமான கிரைம் திரில்லர் கதையம்சம் கொண்ட படம் முற்றிலும் புதுமுகங்கள் நடித்து வந்து இருக்கும் படம்

அறிமுக நாயகனாக ராம் அருண் கஸ்ட்ரோ, நாயகியாக விஷ்ணு பிரியா பிள்ளை காயத்திரி லிஜேஷ் மற்றும் பலர் நடிப்பில் கிருஷ்ணா சேகர் ஒளிப்பதிவில் ரோன்னி ரப்பில் இசையில் நடிகராக வளம் வந்த பவல் நவநீதன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கிற படம் V1

சென்னையில் நடிக்கும் ஒரு பெண்ணின் கொலையை துப்பறியும் படம் தான் இந்த படம் படத்தின் பலம் திரைகதை தான் ஆம் இந்த கொலையை யார் செய்து இருப்பார்கள் என்பதை பல விதத்தில் யூகிக்கும் போலிஸ் தோல்வியை சந்திக்கிறார்கள்.இதனால் உயர் அதிகாரியின் வெறுப்புக்கு போகும் நாயகன் ராம் அருண் கோவத்தில் தடுமாறாமல் நாம் எங்கு தவறு செய்தோம் என்று மிகவும் அல்லோசித்து தன் சக தோழியும் இதே கேசில் தனக்கு உதவியாக இருக்கும் விஷ்ணு ப்ரியா உதவியோடு இந்த கொலையா செய்தார்கள் என்பதை மிகவும் எதார்த்தமான திரைகதை மூலம் படத்தை நகர்த்தியுள்ளார் இயக்குனர் பவல் நவநீதன்

புதுமுக மாக அறிமுகமாகும் ராம் அருண் படத்தின் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்து இருக்கிறார். தேவை இல்லாமல் அலட்டி கொள்ளாமல் கதைக்கு என்ன தேவையோ அதை மிகவும் சிறப்பாக செய்துள்ளார்.

அதொபோல படத்தின் நாயகி விஷ்ணு பிரியா பிள்ளை அற்புதம் நிஜத்தில் ஒரு பெண் போலிஸ் அதிகாரியை பார்த்தது போல பிரமிப்பு கதாபாத்திரத்துக்கு ஏற்ப உடல்வாகு அதற்கு ஏற்ப கம்பீரமான நடிப்பு மூலம் நம்மை கவர்ந்து இருக்கிறார்.

மற்றபடி படத்தில் நடித்தவர்கள் அனைவரும் கதை கதாபாத்திரத்துக்கு ஏற்ப நடித்து உள்ளனர் படத்தில் தேவையில்லாத காட்சிகள் இல்லை கதைக்கு என்ன தேவையை அதை மட்டும் வைத்து உள்ளார் இயக்குனர் தேவை இல்லாத பாடல்கள் காதல் காட்சிகள் இப்படி எதுவும் இல்லாமல் சிறந்த கதை திரைகதை மூலம் நம்மை கவர்ந்துள்ளார். இயக்குனர் பவல் நவநீதன்

படத்தின் கதையும் கதைகலத்தையும் முழுமையாக சொல்லவில்லை ஏன் பல கதாபாத்திரங்களை பற்றியும் சொல்லவில்லை காரணம் படம் பார்க்கும் சுவாரிசம் போய்விடும் என்பதால்.

நடிகராக நல்ல பெயரை வாங்கிய பவல் நவநீதன் இந்த படம் தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நிருப்பிதுள்ளர். கிரைம்சினிமா பிரியர்களுக்கு மட்டும் இல்லை அனைவரும் திரையரங்கம் சென்று பார்க்கும் படமாக அமைந்துள்ளது  Rank 3.5/5