
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘விஜய் 62’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். யோகிபாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இவர்கள் கூட்டணியில் பிரபல அரசியல்வாதி பழ கருப்பையாவும், ராதாரவியும் சமீபத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இந்நிலையில், நடிகை வரலட்சுமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வரலட்சுமி பிறந்த நாளான இன்று விஜய் படத்தில் நடிப்பதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருப்பது, அவருக்கு மறக்க முடியாத பிறந்த நாள் பரிசாக அமைந்திருக்கிறது.