Friday, October 30
Shadow

வெள்ளைப் பூக்கள் திரை விமர்சனம் (ரேடிங் 2.5/5)

வெள்ளைப் பூக்கள் படத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் டிஐஜி.,யாக விவேக் நடித்துள்ளார். அவரின் நண்பராக சார்லி நடித்துள்ளார். சார்லியின் மகளாக பூஜா தேவரியாவும், விவேக்கின் மகனாக தேவ் மற்றும் மருமகளாக அமெரிக்க பெண் பெய்ஜி ஹெண்டர்சன் நடித்துள்ளார்.

படத்தின் நாயகனாக ஓய்வு பெற்ற போலீஸ் டிஐஜி.,யாக விவேக் அமெரிக்காவில் செட்டிலான தன் மகனுடன் நாட்களை கழிக்க செல்கிறார். அப்போது அவரின் வீட்டில் அருகே உள்ள ஒரு இளம் பெண் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்.

இந்த சம்பவம் முதன் முறை அல்ல, தொடர்ச்சியாக நடைப்பெற்று வருவதாக அறிந்த விவேக் மற்றும் அவரது நண்பர் சார்லி குற்றவாளி யார், ஏன் இந்த கொடூரத்தை செய்கிறார் என்பதை கண்டுபிடிப்பதும், கதையில் சற்றும் சுவாரஸ்யம் குறையாமல் இருக்கும் வகையில் யார் குற்றவாளி என ஒவ்வொருவர் மீதும் சந்தேகப்படுவதும், கடைசியில் வித்தியாசமான அருமையான பட முடிவை யாரும் யூகிக்க முடியாத வகையில் இயக்கப்பட்டுள்ளது இந்த வெள்ளைப் பூக்கள் படம்.

படத்தின் பலம் இயக்குனர் விவேக் இளங்கோவன். இவரின் கதை மட்டுமல்லாமல் படத்தின் கதைக்காக அவர் தேர்ந்தெடுத்துள்ள கதாபாத்திரங்கள் மிக அருமையாக நடித்துள்ளனர் என்பதற்கு பதிலாக பொருந்தியுள்ளனர் என்றே கூற வேண்டும்.

சாதாரணமாக தமிழகத்தில் நடக்கும் குற்ற படங்களை அதிகளவில் பார்த்திருப்போம். ஆனால் இந்த படம் முழுக்க முழுக்க அமெரிக்காவின் அருமையான சூழலில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பலமாக ஓய்வு பெற்ற போலீஸ் விவேக் நடித்திருந்தாலும், அவரின் மைண்ட் வாய்ஸ் உடன் பேசும் காமெடி பேச்சு, அவரின் அமெரிக்க மருமகளுடன் நடக்கும் உரையாடல் போன்றவை படத்தில் கலகலப்பு பகுதி. ஆக்ரோஷமாக, காமெடியாக, குற்றத்தை கண்டுபிடிக்கும் யூகங்கள் ஒரு போலீஸ் அதிகாரியின் பார்வை என விவேக் அல்டிமேட்டாக நடித்துள்ளார்.

படத்தின் முதல் பகுதியை விட 2வது பகுதி மிகவும் விறுவிறுப்பாக கதைக்கு ஏற்றபடி நகர்கின்றது. ஒருபுறம் கொலையை கண்டுபிடிக்கும் காட்சிகள் மறுபுறம் போதை பொருள் கடத்தல் என இரண்டு விதமாக கதை நகர்கின்றது.

மொத்ததில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத படமாக இது இருக்கும்.