Thursday, April 18
Shadow

“விஜய் 6௦” தலைப்பு விநாயகர் சதுர்த்தி ஆண்டு வெளியாகிறது

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் இரண்டாம் வாரம் ஆந்திராவில் தொடங்கவுள்ளது. இந்த படபிடிப்பில் நான்காவது வில்லனாக R.K. சுரேஷ் கலந்து கொள்ள்கிறார் அடுத்த மாதம் இறுதியில் இந்த படத்தின் மொத்த படபிடிப்பும் முடிவடைகிறது பொங்கலுக்கு படத்தை திரைக்கு வர திட்டமிட்டுள்ளனர் அதே போல் படத்தின் டீசர் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளனர் .

இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த இப்படத்தின் டைட்டில் விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Leave a Reply