Monday, November 28
Shadow

விஜய் 61 படத்தின் கதை கசிந்தது – முழு விவரம் உள்ளே!

தற்போது விஜய் அட்லீயுடன் கூட்டணியில் விஜய் 61 படம் நடித்து கொண்டு இருக்கிறார் இந்த படத்துக்கு ரசிகர்களிடம் மிகவும் ஒரு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தின் பஸ்ட் லுக் விரைவில வரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களுக்கு மிக பெரிய அதிர்ச்சி என்றால் இது ரசிகர்களுக்கும் மட்டும் இல்லை விஜய் 61 படகுழுவினருக்கும் பெரும் அதிர்ச்சி ஏற்கனவே சில புகை படங்கள் இணையதளங்களில் கசிந்தபோதே விஜய் மிகவும் கோவத்திற்கு ஆளானார் அட்லி இந்த சமயத்தில் படத்தின் கதை இப்ப இணையதளங்களில் கசிந்துள்ளது .

80-களில் மதுரையில் ஒரு கிராமத்தில் ஊரே போற்றும் பெரியவராக ஊருக்கு பல உதவிகளை செய்து வருகிறார் விஜய். அந்த ஊரில் ஒரு ஃபேக்டரி அமைக்க விஜய்யிடம் உதவி கேட்கிறார் கார்பரேட் அதிகாரியான எஸ்.ஜே.சூர்யா. இதன்மூலம் ஊர் மக்களுக்கு பல நன்மைகள் நடக்கும் எனவும் வாக்குறுதி கொடுக்கிறார்.

ஆனால் அந்த ஃபேக்டரியினால் மக்களுக்கு பெரும் கெடுதல் என்பதை கண்டறியும் விஜய், அதை ஊர் மக்களுக்கு சொல்வதற்கு முன்பாக எஸ்.ஜே.சூர்யாவிடம் தட்டிக்கேட்கிறார். எஸ்.ஜே.சூர்யா தனது ஆள் பலத்தால் விஜய்யையும் அவரது மனைவி நித்யா மேனனையும் கொன்று அவர்மீது பழியையும் சுமத்தி ஊர் மக்களிடம் நல்ல பெயர் வாங்குகிறார்.

தன் தந்தையை கொன்ற எஸ்.ஜே.சூர்யாவை பழிவாங்கி தன் தந்தை மீதிருந்த குற்றதை பொய்யென மகன் விஜய் நிகழ்காலத்தில் நிரூபிப்பதே மீதிக்கதை. இதில் விஜய்யுடன் பணிபுரியும் பெண்ணாக காஜல் அகர்வாலும் காதலியாக சமந்தாவும் விஜய்யை தத்தெடுத்து வளர்ப்பவராக சத்யராஜூம் நடிக்கிறார்கள்.

அப்பா – மகன் பாசம் மற்றும் ஃபேக்டரி கெமிக்கல்ஸ் மூலம் ஏற்படும் பாதிப்பு ஆகியவற்றை சென்டிமென்ட் + சமூகம் சார்ந்த மெசேஜ் என கலந்துக்கட்டி ஒரு கமர்ஷியல் படம் கொடுக்க தெறியாய் வேலை செய்து வருகிறார் அட்லி.

Leave a Reply