
‘மெர்சல்’. படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார்.
விஜய்யின் 62-வது படமாக உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ஜெயமோகன் வசனம் எழுதுகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொங்கிய நிலையில், முதலில் பாடல் காட்சியை படமாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
அந்த பாடல் விஜய்யின் அறிமுக பாடல் என்றும் கூறப்படுகிறது. தற்போது விஜய்யின் மற்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸாக இருக்கிறது.