
விஜய் இதற்கு முன்னாடி ஒரு படம் முடித்தவுடன் தான் அடுத்த படத்தின் அறிவிப்பு வரும் ஆனால் இப்ப அடியெல்லாம் இல்லை ஒரு படம் முடிவதற்குள் அடுத்த படத்தின் அறிவிப்பை அறிவிக்கிறார். இதுவும் சமீபத்தில இருந்து தான் ஆரம்பித்தார் என்று சொல்லவேண்டும்.
தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து கொண்டு இருக்கும் விஜய் , விஜய் 61 படம் இன்னும் 25% சதவீதம் கூட இன்னும் முடியவில்லை அதற்குள் விஜய் 62 படத்தின் இயக்குனர் யார் என்று மிக பெரிய சர்ச்சை நடந்து கொண்டு இருக்கிறது.
முதலில் ஏ.ஆர். முருகதாஸ் என்று பெயர் அடிபட்டது இப்ப வேறு ஒரு இயக்குனர் என்று செய்திகள் வர தொடங்கியுள்ளது.
தமிழில் எப்போதாவதுதான் ஒரு படம் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வெளிவந்து புயல் போல் எல்லோரையும் புரட்டிப் போடும். அப்படி சமீபத்தில் வெளியான ஒரு படம்தான் துருவங்கள் பதினாறு. 21 வயது இளைஞர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான இப்படம் ஏ.ஆர்.ரகுமான், ஷங்கர், முருகதாஸ், கார்த்திக் சுப்புராஜ், சிவகார்த்திகேயன், சிம்பு என பலரது பாராட்டுக்களை பெற்றது.
இந்நிலையில் இளையதளபதி விஜய்யும் தற்போது இப்படத்தை பார்த்து இயக்குனர் கார்த்திக் நரேனுக்கு ஃபோன் செய்து பாராட்டியுள்ளார். ” பிரில்லியண்ட் ஜாப். உணர்சிகளை நீ கையாண்ட விதம் எனக்கு பிடித்திருக்கிறது. உன் வருங்காலத்துக்கு வாழ்த்துக்கள்” என விஜய் கூறியதாக அவர் கூறியுள்ளார்.
இப்படித்தான் ராஜா ராணி பார்த்துவிட்டு அட்லியை பாராட்டிய விஜய், பின்பு அவருக்கு தெறி படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கினார். அதேபோல் கார்த்திக் நரேன் இயக்கத்திலும் அவர் நடிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
