
விஜய் 62 என்றாலே சும்மா அதிருது என்று தான் சொல்லணும் தமிழ் சினிமாவில் உள்ள இல்லை இந்திய சினிமாவில் இருக்கும் நாயகிகள் முதல் தொழில் நுட்ப கலைஞர்கள் வரை யாருக்கு பணி புரிய வாய்ப்பு கிடைக்கும் என்று போட்டி போட்டு கொண்டு இருக்கிறார்கள் அந்த வகை இதுவரை இந்த படத்தின் நாயகிகள் முதல் இசையமைப்பாளர் தொழில் நுட்ப கலைஞர்கள் யார் என்ற எந்த வித அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை அந்த வகையில் ஒரு உக்கிய விஷயம் கசிந்துள்ளது
விஜயின் ‘மெர்சல்’ படத்தின் அத்தனை பாடல்களையும் சூப்பர் ஹிட்டாக்கிய ஏ.ஆர்.ரஹ்மான், விஜயின் 62 வது படத்திற்கும் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் Sye Raa Narasimha Reddy என்ற மெகா பட்ஜெட் படத்தில் இருந்து ரஹ்மான் விலகியுள்ளார். நேரத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
விஜய் 62 படத்தை ஒப்புக் கொள்வதற்காகதான் ரஹ்மான் சிரஞ்சீவி படத்தில் இருந்து விலகியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
