விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி சர்ச்சைகளுக்கு இடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் `மெர்சல்’ படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்க இருக்கிறார்.
இதற்கான முதற்கட்ட பணிகள் மற்றும் கதை எழுதும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு வருகிற ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்திற்கு அங்கமாலி டைரிஸ், சோலோ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள இருக்கிறார். இசையமைப்பாளராக விக்ரம் வேதா புகழ் சாம்.சி.எஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.