Wednesday, October 28
Shadow

விஜயின் அடுத்த படத்தினத்தின் அதிகாரபூர அறிவிப்பு

விஜயின் சர்கார் பல இன்னல்கள் நடுவே மிக பெரிய வெற்றிபெற்றது இரண்டு விதமான விமர்சனங்கள் வந்தாலும் படத்தின் வசூல் மிக பெரிய சாதனையை தொட்டது சர்கார் விஜயின் அடுத்த படம் எப்போது என்று காத்து இருந்த ரசிகர்களுக்கு இடைவிடாமல் விருந்து கொடுக்கிறார் விஜய்

’சர்கார்’ வெற்றியை தொடர்ந்து தனது அடுத்தப் படத்தில் விஜய் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார். ஏற்கனவே, ‘தெறி’, ‘மெர்சல்’ என்று விஜய்க்கு இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்த அட்லீ தான் விஜயின் 63 வது படத்தை இயக்கப் போகிறார்.

இதில் ஹீரோயினாக நயந்தாரா நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நயந்தாராவுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். அப்படி நயன் இல்லை என்றால், சமந்தா தான் ஹீரோயினாம்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை இன்று காலை போடப்பட்டது. படத்தின் தலைப்பு, தொழில்நுட்ப கலைஞர்களின் விபரங்கள், இயக்குநர் பெயர் உள்ளிட்ட விபரங்கள் இன்று மாலை 4.30 மணிக்கு தயாரிப்பு தரப்பில் இருந்து வெளியாக உள்ளது.