Wednesday, October 28
Shadow

விஜய் ஆண்டனிக்கு வில்லனாகும் ஆர்.கே. சுரேஷ்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகனாக இருப்பவர் ஆர்.கே.சுரேஷ் என்று சொல்லலாம் இயக்குனர் பாலாவால் வில்லனாக அறிமுகமான ஆர்.கே.சுரேஷ் இப்ப வில்லன் மட்டும் இல்லை ஹீரோவாகவும் களம் இறங்கி கலக்கி வருகிறார். தற்போது ஹீரோவாக இவரின் கைவசம் மூன்று படங்கள் உள்ளது. ‘பில்லா பாண்டி’, ‘வேட்டை நாய்’ இன்னும் சில படங்கள் பேசிவருகிறார் என்றும் பேசப்படுகிறது. எல்லோரும் ஹீரோ அந்தஸ்து கிடைத்ததும் வில்லன் என்றால் வேணாம் என்று ஓடி போவார்கள் ஆனால் ஆர்.கே.சுரேஷ் கொஞ்சம் வித்தியாசமாக தனக்கு நல்ல பேர் கிடைத்தால் போதும் வில்லன் ஹீரோ என்பதை விட நான் நல்ல நடிகன் என்ற பேர் போதும் என்று தற்போது விஜய் ஆண்டனி படத்தில் வில்லனாக களம் இறங்குகிறார்.

‘பிச்சைக்காரன்’, ‘சைத்தான்’, ‘எமன்’ ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி தற்போது ‘அண்ணாதுரை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ‘காளி’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தில் நடிப்பதோடு, தயாரிக்கவும் செய்யவிருக்கிறார் விஜய் ஆண்டனி. இந்நிலையில், இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஆர்.கே.சுரேஷ் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Leave a Reply