Friday, March 13
Shadow

விஜய் படத்தின் நாயகி ஆசியாவின் கவர்ச்சிக் கன்னியாக தேர்வு யார்? படங்கள் உள்ளே

தளபதி படம் மூலம் அறிமுகமான உலக அழகி தான் பிரியங்கா சோப்ரா இவர் விஜயின் தமிழன் படம் மூலம் அறிமுகமானார் இந்த படத்தின் இயக்குனர் மஜீத் இதன் பின்னர் பிரியங்கா ஹிந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்து கொடிகட்டி பறந்தார் தற்போது ஒரு பேட்டியிலும் எனக்கு பிடித்த நடிகர் விஜய் என்றும் மெர்சல் படத்தின் பிரச்சனை போது விஜய்க்கு தன் ஆதரவை தெரிவித்தார் என்பது நாம் அறிந்த விஷயம் சரி நாம் விஷயத்துக்கு வருவோம்

இந்தி பட உலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. ஹாலிவுட்டிலும் இவர் தனி இடம் பிடித்திருக்கிறார். இப்போது ஆசியாவின் கவர்ச்சி மங்கை ஆகிஇருக்கிறார்.

லண்டனில் உள்ள ‘ஈஸ்ட்டர்ன்ஐ’ என்ற வார பத்திரிகை ஆசியாவில் உள்ள கவர்ச்சியான 50 பெண்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பிரியங்கா சோப்ரா முதல் இடம் பிடித்துள்ளார்.

கடந்த ஆண்டு இந்த பட்டியலில் முதல் இடம் பிடித்தவர் தீபிகா படுகோனே. இந்த முறை அவரை பின் தள்ளிவிட்டு பிரியங்கா சோப்ரா முதல் இடத்தை பிடித்திருக்கிறார். டி.வி. நடிகை நித்யா சர்மாவுக்கு 2-வது இடமும், தீபிகாவுக்கு 3-வது இடமும் கிடைத்திருக்கிறது

ஆலியாபட் 4-வது இடத்தை பிடித்திருக்கிறார். 5-வது இடம் பாகிஸ்தான் நடிகை மாஹிரா கானுக்கு கிடைத்துள்ளது.

இது பற்றி கூறியுள்ள பிரியங்கா சோப்ரா, “ஆசியாவின் கவர்ச்சி மங்கையாக தேர்ந்து எடுக்கப்பட்டது. மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவருக்கும் நன்றி”என்று தெரிவித்துள்ளார்

Leave a Reply