Friday, April 17
Shadow

விஜய் சேதுபதியின் “96” படம் நிச்சயம் மனதை வருடும் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு காதல் கவிதை

சமீபகாலமாகவே தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது அதற்கு எடுத்துகாட்டு மேற்கு தொடர்ச்சி மலை நேற்று வெளியாகி ஓடிகொண்டு இருக்கும் படம் பரியேரும் பெருமாள் இப்படி நல்ல கதையம்சம் கொண்ட படங்களாக தான் வந்து கொடு இருக்கிறது. அதிலும் விஜய் சேதுபதி படங்கள் என்றால் நிச்சயம் தரமான கதையம்சம் கொண்டபடங்கலாக தான் வரும் அந்த வரிசையில் விஜய் சேதுபதியின் படம் 96

96 படத்தின் டைட்டில் ஒரு கதை சொல்கிறது 96 நடக்கும் ஒரு காதல் கதையாம் அது தான் 96 என்ற டைட்டில் வைத்து இருக்கிறார் இயக்குனர் பிரேம்குமார் இவருக்கு இது முதல் படம் அனால் ஒளிபதிவாளராக பல வெற்றி படங்களை பணிபுரிந்தவர். இவரின் இயக்கத்தில் வரும் முதல் படைப்பு அதுவும் முத்தனா படைப்பு என்று சொல்லலாம் காரணம் இன்று இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. இதில் இரண்டு பாடல்கள் திரையிட்டனர் அது இந்த படத்தின் ட்ரைலர் மனதை மையில் இறகு வைத்து மனதை வருடியது போல இருந்தது அப்படியான பாடல்கள் கொடுத்து இருக்கிறார் இந்த படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா


ட்ரைலர் அதற்கு மேல் மனதை பாதித்தது ட்ரைலர் பாடல்கள் இப்படி என்றால் காட்சியமைப்பு மேலும் குளுமையாக இருந்தது படத்தின் படபிடிப்பு இடங்கள் அப்படி அப்படி ஒரு புதுவிதமான இடங்களில் படம்பிடித்துள்ளார்கள் படக்குழு அருமையான ஒளிப்பதிவு அருமையான கதை அருமையான பாடல்கள் இப்படி பல நல்ல விஷயங்களை தாங்கி வரும் இந்த படத்தின் ட்ரைலர் படம் எப்பட வெளிவரும் என்ற ஆவலை தூண்டியது அந்த அளவுக்கு மிக சிறப்பான காதல் கதையாக இருக்கும் என்பதில் சிறுதும் சந்தேகம் இல்லை

அதேபோல இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஜய் சேதுபதியை தவிர எல்லோரும் த்ரிஷாவை காதலிப்பதாக சொன்னார்கள். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா நானும் த்ரிஷாவை காதலித்தேன் அனால் இந்த படத்தில் விஜய் செதுபத்யும் த்ரிஷா காதல் எல்லாத்தையும் மறைத்து விட்டது அந்த அளவுக்கு ஒரு நேர்த்தியான நடிப்பை விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா கொடுத்துள்ளனர் பார்க்கும் அனைவரையும் மிகவும் ரசிக்கவைக்கும் உண்மையான காதலர்கள் கண்ணில் நிச்சயம் கண்ணீர் கசியும் .