Thursday, October 29
Shadow

சில விஷமிகளால் விஜய் சேதுபதிக்கு நேர்ந்த கொடுமை

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அவர் மிகவும் நேர்த்தியான மனிதர் ஒருவருக்கு பிரச்சனை என்றால் தானே முன் வந்து செய்வார் சமீபத்தில் சினிமாவில் உள்ள நலிந்த தொழிலார்ககளுக்கு தங்கம் கொடுத்து உதவியவர் அது மட்டும் இல்லாமல் அவர் ரசிகர்களிடமும் மிகவுமன்பானவர் அவருக்கு நேர்ந்த கஷ்டத்தை பாருங்க .

சினிமாவில் மட்டுமல்லாது சமூகம் சார்ந்த விஷயங்களுக்கும் குரல் கொடுப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. கடந்த 6ம் தேதி செல்போன் திருட்டை கண்டுபிடிக்க உதவும் வகையில் போலீசாரால் அறிமுகம் செய்யப்பட்ட, டிஜிகாப் செயலி நிகழ்ச்சியில் பங்கேற்றார். செல்போன் பறிப்பு சம்பவங்களால் மக்களிடையே அச்சம் நிலவுகிறது. காவல்துறைக்கும், பொதுமக்களுக்குமான இடைவெளி, டிஜிகாப் செயலி மூலம் குறையும் என்றார்.

இது டிவி சேனல் ஒன்றின் டுவிட்டரில் பதிவாகி இருந்தது. விஜய் சேதுபதி கூறிய கருத்துக்கு மாறாக, பகவத் கீதையை அவதூறு கூறுவதுபோல் இருக்கும் வாசகத்தை போட்டோஷாப்பில் மாற்றி விஷமிகள் சிலர் பரப்பினர். விஜய் சேதுபதி பகவத் கீதையை அவமதிக்கிறார் என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்ததால் சர்ச்சையானது.

இந்த விஷயம் விஜய் சேதுபதியின் காதுக்கு வர உடனடியாக டுவிட்டரில் விளக்கம் கொடுத்தார். அதில், “என் அன்பிற்குரிய மக்களுக்கு பகவத்கீதை மட்டுமல்ல, எந்த ஒரு புனிதநூலை பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாக பேசியதும் இல்லை, பேசவும் மாட்டேன். சில சமூகவிரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது. எந்த சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையும், ஒற்றுமையும் குலைக்குமாறு நான் நடந்து கொள்ளவே மாட்டேன்”. என பதிவிட்டார்.

என் அன்பிற்குரிய மக்களுக்கு
பகவத்கீதை மட்டுமல்ல எந்த ஒரு புனிதநூலை பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாக பேசியதும் இல்லை
பேசவும் மாட்டேன்
சில சமூகவிரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது
எந்த சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையும் ஒற்றுமையும் குலைக்குமாறு நான் நடந்து கொள்ளவே மாட்டேன்