Saturday, April 18
Shadow

குஷியில் தெரிக்கவிட்ட விஜய் ரசிகர்கள் அப்செட்டில் விஜய்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புது படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. அதனால், ‘விஜய் 62’என்று அழைக்கப்படும் இப்படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இன்று சென்னை ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடைபெற்ற படத்தின் போட்டோ ஷூட்டின் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி பரவியது. இதனை அறிந்த படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

விஜய்யை போல விஜய் ரசிகர்களும் சார்ப் என்பதை நிருபித்துள்ளனர் ஆனால் இது படத்துக்கு ஆபத்து இப்படி எல்லாமே படக்குழுவினர் விளியிடும் முன் வெளியானால் அது விஜய்க்கும் படத்துக்கும் ஆபத்து புகைப்படங்கள் மட்டும் கசியவில்லை இந்த வீடியோவும் கசிந்தது.

ரோல்ஸ் ராய்ஸ் கார் அருகில் விஜய் கோட் ஷூட்டோடு நிற்பது போலவும், சிகரெட் புகைப்பதும் போலவும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானதால், விஜய் ரொம்பவே அப்செட்டாகிவிட்டாராம்.

ஆனால், விஜய் ரசிகர்களோ வெளியான புகைப்படங்களை வைத்து விஜய் 62 படத்திற்கு போஸ்டர் டிசைன் செய்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு கொண்டாடி வருகிறார்கள்.

நேற்று ரசிகர்களுக்கு செம விருந்து என்று தான் சொல்லணும் காரணம் நாயகி யார் என்பதும் தெரியவந்தது அதோடு கசிந்த புகைப்படங்கள் குஷியில் ரசிகர்கள் அனால் அப்செட்டில் விஜய் மற்றும் படக்குழு

Leave a Reply