
ரமலான் தினமான இன்று நடிகர் விஜய் நடிக்கும் தளபதி-63 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை இசையமைப்பாளர் ஏ அர் ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தளபதி-63க்கான முதல் பாடல் வேலைகள் ஆரம்பமானது என்று குறிப்பிட்டுள்ளார்.
தெறி, மெர்சல் திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்- அட்லி கூட்டணியில் உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். மேலும், கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி, ரெபா மோனிகா, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்த படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ள உள்ள நிலையியல், இந்த படத்தின் முதல் பாடல் வேலைகள் ஆரம்பமானது என்ற தகவலை ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ளார்.
