
‘விக்ரம் வேதா’ படத்துக்கு தணிக்கை அதிகாரிகள் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியதைத் தொடர்ந்து, மறுதணிக்கைக்கு சென்றுள்ளது படக்குழு.
படு ஹிட் அடித்த ‘ இறுதி சுற்று” வெற்றி படத்தை அடுத்து நடிகர் மாதவன் ‘ஓரம் போ’, வா ஆகிய படங்களை இயக்கிய புஷ்கர்-காயத்ரி சொன்ன கதையில் மய்ங்கிதான் ‘விக்ரம்-வேதா’ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். இந்த படத்தில் அடிசினல் மாஸாக தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து வரும் விஜய் சேதுபதியும் இணைந்துள்ளார். ‘ஒரு நடுத்தர வயது தோற்றத்தில் சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் வரும் விஜய் சேதுபதி.. வேதாளமாக – கேங்க்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை அடக்க முயலும் போலீஸ் அதிகாரியாக ‘விக்ரமாதித்யன்’ என்ற கதாபாத்திரத்தில் மாதவன் நடித்துள்ளார்.
சிறுவயதில் நமது மூதாதையர்கள் சொன்ன விக்ரமாதித்தன் – வேதாளம் கதையைதான் புது வடிவில் மேலும் இந்த படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், கதிர் உட்பட பலர் நடித்துள்ள ‘விக்ரம் வேதா’ படத்தை தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு. தணிக்கை அதிகாரிகள் படத்தைப் பார்த்து ‘ஏ’ சான்றிதழ் வழங்கவே படக்குழு அதிர்ச்சியடைந்தது.
தற்போது மறுதணிக்கைக்கு சென்றுள்ளது படக்குழு. விரைவில் அப்பணிகள் முடிவடைந்து, ஜூலை 7-ம் தேதி வெளியீட்டுக்கு தயாராகி விடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.