Sunday, April 19
Shadow

அஜித்தை வைத்து இயக்கிய நான்கு படங்களில் விஸ்வாசம் தான் பெஸ்ட் இயக்குனர் சிவா

விஸ்வாசம் படத்தின் இயக்குனர் சிவா இதுவரை விஸ்வாசம் படத்தை பற்றி இதுவரை எந்த வித செய்திகளும் சொல்லவில்லை முதல் முறையாக தன் மௌனத்தை கலைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவிலேயே ஒரு இயக்குனர் ஒரே ஹீரோவை வைத்து அடுத்தடுத்து நான்கு படங்கள் இயக்குகிறார் என்றால் அது அஜித் சிவா கூட்டணி மட்டும் தான். அந்த அளவுக்கு அஜித்தின் ஆஸ்தான இயக்குனராக மாறிவிட்ட சிவா, தற்போது அஜித்தை வைத்து விஸ்வாசம் படத்தை இயக்கி ரிலீஸுக்கும் கொண்டு வந்துவிட்டார்.

வரும் ஜன-1௦ஆம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் விசுவாசம் படம் பற்றிய செய்திகளை பகிர்ந்து கொண்ட சிவா, அஜித்தை வைத்து தான் இயக்கிய வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என இந்த நான்கு படங்களில் விசுவாசம் படம் தான் பெஸ்ட் என அவரே கூறியுள்ளார்.

ஏற்கனவே உற்சாகத்தில் இருக்கும் அஜித் ரசிகர்கள் இந்த செய்தியால் ரசிகர்கள் இன்னும் உற்சாகமாவார்கள் என்பது உறுதி . அதோடு ஐந்தாவது படத்தை இயக்கவும் தயாராக உள்ளாராம் அப்படி கிடைத்தால் அது எனக்கு வரம் என்று கூறியுள்ளார்.