
வரும் ஜனவரி 10ம் தேதி உலகெங்கும் ரிலீஸ் ஆகும் தல படத்தின் விஸ்வாசம் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது அதோடு இந்த படத்தின் ட்ரைலர் வெளியானதும் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களை விட குடும்பங்கள் மதத்திலும் குறிப்பாக பெண்கள் மத்தியில் அதிக வரவேற்ப்பு உள்ளது அதோடு ட்ரைலரில் வரும் வசனங்கள் ரஜினியின் பேட்ட படத்தை குறிவைத்து இருப்பதாக சொல்லி வருகின்றனர் ஒரு தரப்பினர் இதற்கு முற்றுபுள்ளி வைக்கிறார் எடிட்டர் ரூபன்
படத்தின் பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பை விட படத்தின் ட்ரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. விஸ்வாசம் படத்துக்கு தணிக்கையில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் இந்தப் படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

“உங்க மேல கொல கோவம் வரணும், ஆனா உங்கள எனக்கு பிடிச்சிருக்கு சார், பேரு தூக்குதுரை, தேனி மாவட்டம் ஊரு கொடுவிளார்பட்டி, பொண்டாட்டி பேர் நிரஞ்சனா, பொண்ணு பேர் ஸ்வேதா, ஒத்தைக்கு ஒத்த வாடா” உள்ளிட்ட அஜித்தின் வசனங்களை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். அதேவேளையில் பேட்ட படத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த வசனங்கள் ட்ரெய்லரில் இடம்பெற்றிருப்பதாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இதுகுறித்து தனியார் இணையதள ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் படத்தொகுப்பாளர் ரூபன், “எதார்த்தமாக படத்தில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள்தான் அவை. இயக்குநர், தயாரிப்பாளர் என்னிடம் 1 நிமிடம் இருக்கக்கூடிய டீசர் வேண்டும் என்று கேட்டனர். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ட்ரெய்லர் மட்டும்தான் பூர்த்தி செய்யும் என்று நினைத்தேன். அதன்படிதான் ட்ரெய்லர் உருவானது. ட்ரெய்லரில் இருக்கும் அனைத்து காட்சிகளும் படத்தில் இடம்பெற்றிருக்கும்.
ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள மாஸ் காட்சிகள் அனைத்தும் படத்தில் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. எமோஷனல் காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது. நான் ட்ரெய்லரை முடித்த பின்பு முதல்முறையாக எனது உதவியாளர்களிடம் தான் காண்பித்தேன். அதன்பிறகு இயக்குநர் சிவாவிடம் காண்பித்தேன். ட்ரெய்லர் தாமதமானதற்கு காரணம், சரியாக இருக்க வேண்டும் என்ற மெனக்கெடல்தான்.
இயக்குநர் சிவா, அட்லீ இருவருக்கும் இடையே இருக்கும் ஒற்றுமை என்னவெனில் பார்வையாளரும், ரசிகர்களும் தனது படத்தின் நாயகனை எப்படி கொண்டாடுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு பணியாற்றுவதுதான். விஸ்வாசம் படத்தின் கிளைமாக்ஸ் பார்த்து நான் மட்டுமல்ல படக்குழுவினர் பாதிபேர் அழுதுவிட்டனர். படத்தின் இடைவேளைக் காட்சி மிகவும் மாஸ் நிறைந்ததாக இருக்கும். கதையை ரிவீல் செய்யும் காட்சியாக அக்காட்சி அமைந்துள்ளது. அது இயக்குநர் சிவாவின் ஸ்பெஷல்” என்று கூறியுள்ளார்.
படம் குறித்து பேசிய இயக்குநர் சிவா, “அஜித் என்மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு விஸ்வாசமான படம் விஸ்வாசம். 4 படம் பணியாற்றி இருக்கிறேன். இந்தப் படம்தான் எனக்கு ஸ்பெஷல். கதைக்கு நயன்தாரா ரொம்ப ப்ளஸ். அவருடைய வயதுக்கு ஏற்ற மாதிரிதான் அஜித் தன்னுடைய கதையைத் தேர்வு செய்வார். படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உட்பட யாரையும் அஜித் எப்போதுமே தேர்வு செய்யமாட்டார். அதில் அவர் தலையிடவும் மாட்டார்” என்று கூறியுள்ளார். #ruban #rajinikanth #petta
