
அஜித்தின் விஸ்வாசம் படம் தீபாவளிக்கு அல்ல மாறாக பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளதாம்.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் விஸ்வாசம். படப்பிடிப்பு துவங்கவே காலதாமதமானது. இதில் சினிமா ஸ்டிரைக் வேறு நடந்ததால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.
இந்த காரணங்களால் ரிலீஸ் தேதியும் தள்ளிப் போயுள்ளது.
விஸ்வாசம் படத்தை இந்த தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய சிவா திட்டமிட்டார். விஜய்யின் சர்கார் படமும் தீபாவளிக்கு வருவதால் இந்த தீபாவளி செமயாக இருக்கும் என்று ரசிகர்கள் நினைத்தனர்
இந்த தீபாவளிக்கு விஸ்வாசம் படத்தை ரிலீஸ் செய்ய முடியாத நிலையில் உள்ளார் சிவா. ஆனால் படம் நிச்சயம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று சிவா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்
தல தீபாவளி இல்லை என்பதை அறிந்து கவலையில் இருந்த ரசிகர்களுக்கு இந்த பொங்கல் தல பொங்கல் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது
விஸ்வாசம் படத்தில் கோவை சரளாவை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். பூவெல்லாம் உன் வாசம் படத்தில் விவேக், கோவை சரளா அஜித்துடன் நடித்தனர். தற்போது அந்த வெற்றி கூட்டணி விஸ்வாசத்திலும் சேர்ந்துள்ளது.
