Wednesday, October 28
Shadow

விஸ்வாசம் டீசர் வெளியாகும் நாள் அப்டேட் அதிகாரபூர்வ அறிவிப்பு

விஸ்வாசம் டீசர் மற்றும் படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.அஜித்துடன் 4-வது முறையாக கூட்டணி அமைத்திருக்கும் இயக்குநர் சிவா விஸ்வாசம் படத்தை இயக்கி முடித்துள்ளார்.

அஜித் இரண்டு தோற்றங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நிரஞ்சனா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் படத்தின் பாடல்களை சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தின் டீசர் குறித்து தனியார் விருது வழங்கும் விழாவில் கடந்த 16-ம் தேதி பேசிய படத்தின் இயக்குநர் சிவா இன்னும் 10 நாட்களில் வெளியாகும் என்று தெரிவித்திருந்தார். அவர் தெரிவித்த தகவலின்படி நாளை டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிய வருகிறது.

அதேபோல் பொங்கலுக்கு முன்னதாக ஜனவரி 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பேட்ட படம் 11-ம் தேதி திரைக்கு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. #ajith #ajithkumar #viswasam #siva #nayanthara #yogibabu #roboshankar #thambiramayya #imman