Sunday, July 5
Shadow

ஒத்தைக்கு ஒத்தை வாடா! —‘தல’ விட்ட சவால்.அதிருது! விஸ்வாசம் ட்ரைலர் விமர்சனம்

தல அஜித் நடிப்பில் நயன்தாரா மற்றும் ரோபோ சங்கர் யோகிபாபு தம்பி ராமையா மற்றும் பலர் நடிப்பில் இம்மான் இசையில் சிவா இயக்கத்தில் பொங்கலுக்கு வரும் படம் விஸ்வாசம் இந்த படத்தின் போஸ்டர் பாடல்கள் தான் இதுவரை வெளியானது இன்று தான் இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள் அப்படி தான் இந்த படத்தின் ட்ரைலர் அமைந்துள்ளது. ட்ரைலர் ஆரம்பத்தின் தத்துவமே சும்மா அதிருது

வாழ்கையில அழாத பணக்காரனும் இல்லை சிரிக்கத ஏழையும் இல்ல என்று தல என்ட்ரி சும்மா அதிருது அதேபோல எல்லோருக்கும் வணக்கம் சொல்லும் ஸ்டைல் வாவ் அதே போல பங்காளிகளா அடிச்சு தூக்கலாம என்று சொல்லும்போது நம்மை அறியாமல் நமக்குள் ஒரு சிலிர்ப்பு சண்டை காட்சிகளில் வேதாளம் வீரம் படங்களை எல்லாம் தாண்டும் ஒரு உச்சம் தல ஏர் கலப்பையை தூக்கி வரும் போது சும்மா அப்படி ஒரு ஸ்டைல் அதேபோல நயன்தாரா என்ட்ரி இன்னும் அழகு அதிலும் நயன்தாராவிடம் தல நீங்க பேர் அழகி என்று சொல்லுவதும் நயன்தாரா ரியாக்சனும் திரைஅரங்கம் அதிரும்.

வில்லன் ஜெகபதி பாபு என் கதையில் நான் ஹீரோடா என்று சொல்லும் போது தல நான் வில்லன்டா என்று அடிக்கும் காட்சி மாஸ் அதேபோல பைக் பைட் தலகிட்ட சொல்லவாவேனும் சும்மா தெறிக்க விடுகிறார் இந்த படம் தான் பொங்கலுக்கு பாரக், கொண்டாட்டம்,திருவிழா எல்லாமே அதிலும் தல சவால் பாருங்க

அதிரவிட்டுக்கொண்டிருக்கிறார்கள் தல ரசிகர்கள்.விஸ்வாசம் படத்தின் டிரெய்லர் விட்ட பிறகு உற்சாகத்தின் எல்லைக்கே போய் விட்டார்கள். “பேரு தூக்கு துரை.தேனீ மாவட்டம்.பொண்டாட்டி பேரு நிரஞ்ச்சனா..பொண்ணு பேரு ஸ்வேதா.ஒத்தைக்கு ஒத்தை வாடா!” என்று அஜித்குமார் மீசையை முறுக்கிவிடும் சீன் செம. “ஆனால் வைரலாகும் வசனம் இதுதான்! “ஏறி மிதிச்சேன்னு வையி. மூச்ச கூட வாங்க முடியாதுடா!” #ajith #thala #ajithkumar #viswasam #review #siva #nayanthara #imman #yogibabu