
இன்னும் 12 நாட்களில் பிரமாண்டமாக வெளியாகவிருக்கிறது ‘விவேகம்’ படம். இப்போதே ஒவ்வொரு திரையரங்குகளிலும் பேனர்கள், போஸ்டர்கள், கட்அவுட்கள் வைத்து திருவிழா போன்று கொண்டாட தயாராகிவிட்டனர் அஜித் ரசிகர்கள். இன்னும் சிலர் படம் ரிலீஸன்று பாலபிஷேகம், அன்னதானத்துக்கு கூட தயார் செய்துவிட்டனர். இது ஒருபக்கம் இருக்க, விவேகம் படத்தின் ஏரியா வாரியான வியாபாரங்கள் விறுவிறுப்பாக நடந்து முடிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வீரம் படத்தின் தமிழ்நாடு தியேட்டர்கள் உரிமை 34 கோடிக்குத் தான் விலைபோனது. வேதாளம் படத்தின் தமிழ்நாடு தியேட்டர்கள் உரிமை 42 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டது. அதோடு, வேதாளம் படம் கமர்ஷியலாக மிகப்பெரிய வெற்றியடைந்ததால் படத்தை வாங்கியவர்கள் லாபம் சம்பாதித்தனர்.
இப்போது வேதாளம் படத்தைவிட சுமார் 12.5 கோடிக்கு கூடுதலாக வியாபாரம் ஆகியிருக்கிறது விவேகம். அதாவது விவேகம் படத்தின் தமிழக தியேட்டர்கள் உரிமை மட்டும் 54.5 கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது. விவேகம் ஏரியா வாரியாக என்ன விலைக்கு விற்கப்பட்டுள்ளது என்ற விவரம் கீழே…
சென்னை சிட்டி – 5 கோடி
செங்கல்பட்டு – 11.50 கோடி
வட ஆற்காடு – 4 கோடி
தென் ஆற்காடு – 3.25 கோடி
மதுரை – 6.30 கோடி
சேலம் – 5.35 கோடி
கோவை – 9.30 கோடி
திருச்சி, தஞ்சாவூர் – 6.20 கோடி
திருநெல்வேலி, கன்னியாகுமரி – 3.60 கோடி
