Sunday, April 19
Shadow

விவேகம் – திரைவிமர்சனம் (அஜித்தின் மைல்கல்) Rank 4.5/5

உலக சினிமா ரசிகர்கள் உலக தமிழர்கள் ஆவலோடு எதிர்பார்த்து இருந்த நாள் அஜித ரசிகரளுக்கு இரண்டு வருடத்துக்கு பிறகு வந்த தீபாவளி என்றும் சொல்ல கூடிய நாள் தான் இன்று விவேகம் ரிலீஸ் நாள் என்று தான் சொல்லணும். படத்துக்கு மிக பெரிய எதிர்பார்ப்பு காரணம் ஒன்று அஜித் படம் வெளியாகி இரண்டு வருடம் ஒன்று அடுத்து படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் தான் முக்கிய காரணம் உலக தரம் ஹாலிவுட் மேகிங் இப்படி பல உதாரணங்கள் சொல்லலாம் இதை விட முக்கிய காரணம் இதுவரை இல்லாத அஜித்தின் உழைப்பு என்று தான் சொல்லணும் இதுவே ரசிகர்களின் பல்ஸ் அதிகமானதுக்கு முக்கிய காரணம்.

சிவா அஜித் மூன்றாவது கூட்டனி சிவா அப்படி என்ன செய்யபோகிராறு என்று ஒரு பக்க கேள்வி மறு பக்கம் ஏன் அஜித் தொடர்ந்து சிவா கூட்டணி இதற்கு பதில் சொல்லும் நாளும் இன்று தான் என்று சொல்லணும். தமிழ் சினிமாவுக்கும் ஏன் இந்திய சினிமாவுக்கும் இது ஒரு புது கதை அதோடு களமும் புதுசு என்று நிச்சயமாக சொல்லலாம் ஏன் சிவா என்பதுக்கு சிவா பட இடங்களில் அதை நிருபித்துள்ளார் அஜித்தின் உழைப்பை மிக சீராக பயன்படுத்தியுள்ளார். அஜித் தன ரசிகர்களை மட்டும் இல்லை அவரின் சினிமா கரியருக்கு ஒரு மிக்குஅ படம் என்றும் சொல்லலாம் காரணம் அந்த அளவுக்கு உழைப்பு மட்டும் இல்லை ஸ்டைல் லுக் இப்படி எல்லாமே சொல்லலாம் இப்படி ஒரு சண்டை காட்சிகள் எந்த நடிகராலும் நிச்சயம் போடமுடியாது என்றும் சொல்லலாம் அந்த அளவுக்கான உழைப்பை வெளிபடுத்தியுள்ளார்.

இந்திய சினிமாவில் ஹாலிவுட் படம் இந்திய ஜேம்ஸ் பான்ட் அஜித் என்றும் சொல்லலாம் அந்த அளவுக்கு ஒரு ஸ்டைல் வெளிபடுத்தியுள்ளார் அதோடு அக்ஷன் காட்சியில் மிரட்டியுள்ளார் குறிப்பாக இடைவேளை பைக் காட்சி எல்லாரையும் நாற்காலி நுனிக்கு கொண்டு வருகிறது என்று தான் சொல்லணும் படத்தில் பல காட்சிகள் அப்படி தான் உள்ளது . சரி படத்தி கதையை பார்ப்போம்

உலக அளவில் நடக்கும் பயங்கராவாதத்தை தடுத்து நேர்மையும் நீதியும் தடுக்க ஒரு ஐந்து பேர் கொண்ட குழு இருக்கும் அதில் அஜித் விவேக் ஓபராய் மற்றும் ஆங்கில நடிகர்கள் கொண்ட குழு தான் இந்த ஐந்து பேர் கொண்ட குழு இந்த குழ பேர் அழிவில் இருந்து தடுக்கம் முயற்சி தான் இந்த படத்தின் கதை கரு அஜித் நடாஷா என்ற ஒரு பெண்ணை தேடிபோகிறார் அந்த பெண்ணை மீட்டு நாட்டை காப்பாற்றுகிறா இல்லையா என்பது தான் படத்தின் கதை உலக அளவில்லான பயங்கரவாதத்தை ஏற்கனவே பல ஆங்கில படங்கள் மிகவும் எதார்த்தமாக படைத்துள்ளது அந்த படைப்புகளை கெடுக்காமல் மிகவும் சிறப்பாக கொடுத்துள்ளனர் . சிவா படங்களில் சென்டிமென்ட் இருக்கும் முதல் இரண்டு படங்களில் அண்ணன் தம்பி அடுத்து தங்கை இதில் மனைவி செண்டிமெண்ட் மிக அழகா கையாண்டு இருக்கிறார். அஜித் காஜல் காட்சிகள் மிகவும் எதார்த்தமாக சிறப்பாக படமாகியுள்ளார்.

இந்த படம் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் மட்டுமே படபிடிப்பு நடத்தியுள்ளனர் இதை பார்க்கும் போது இது ஒரு ஆங்கில படமா என்றும் தோன்ற வைக்குறது அந்த அளவுக்கு மிக சிறப்பாக படமாக்கியுள்ளனர். பொதுவாக அஜித் ரசிகர்கள் என்றால் இளைஞர்கள் அகவே இதை இயக்குனர் சிவா ஆனதில் கொண்டு அவர்களை கவரும் வகையில் மிக சிறந்த படமாக கொடுத்துள்ளார் அதோடு அஜித் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் சினிமா ரசிகர்களையும் கவரும் படி ஒரு சிறப்பான படம் கொடுத்துள்ளார் என்று சொன்னால் மிகையாகது

படத்தில் முக்கிய பங்கு என்றால் அது ஒளிப்பதிவு ஹாலிவுட் படங்களின் தரம் வெற்றி படத்தில் மிரட்டியுள்ளார் அதே போல எடிட்டிங் படத்துக்கு மிக பெரிய பலம் இதையெல்லாம் விட படத்தின் முக்கிய பலம் என்றால் அது அனிருத் பாடல்கள் பாடல்காட்சிகள் சிவா உங்களையும் அனிருத் இருவரையும் எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை அந்தளவுக்கு மிக சிறப்பு என்று தான் சொல்லணும். சில சண்டைகாட்சி ஒரு சில ஆங்கில படங்களை நினவு படுத்தினாலும் மிக சிறப்பாக செய்துள்ளனர் அதோடு சாவல் விடுகிறார்கள் அந்த அளவுக்கு மிரட்டியுள்ளர்கள் இந்த படம் மொத்தத்தில் உழைப்பு உழைப்பு என்று தான் சொல்லணும் .

அஜித் சால்ட் அண்ட் பெப்பர் ஏற்கனவே பல படங்களில் பார்த்திருந்தாலும் இதில் ஒரு ஆங்கில நடிகர்போலவே தோற்றம் அளிக்கிறார் அந்த அளவுக்கு ஸ்டைல் நேர்த்தி உடல் அமைப்பு சிக்ஸ் பேக் வாவ் என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறார் கடுமையான உழைப்பு என்று தான் சொல்லணும்

படத்துக்கு தொழில் நுட்ப கலஞர்கள் மற்றும் அஜித் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு முக்கியம் காஜல் என்று தான் சொல்லணும் வாவ் உன்னோடு வாழ்வது தான் என்ற பாடல் நம்மை மிகவும் ரசிக்கவைக்கிறார் அதோடு நம்மை மிகவும் கவர்ந்துள்ளார். காஜல் சினிமா வாழ்கையில் மீண்டும் இப்படி ஒரு அழுத்தமான கதாபாத்திரம் கிடைக்குமா என்று கேட்டல் அது கேள்விகுறி தான் அந்தளவுக்கு சிறப்பு இதுவரை மாடன் டிரஸ் பார்த்த காஜல் வெறும் புடவையில் தான் காட்சி தருகிறார் அழகு அழகு என்று சொல்லணும்

அக்ஷார ஹாசன் படத்துக்கு மேலும் பலம் குறைந்த காட்சிகள் ஆனால் மனசுக்கு நிறைவான காட்சிகள் புலிக்கு பிறந்தது புலி தான் என்று நிருபித்துள்ளார் என்று தான் சொல்லணும்

விவேக் ஓபராய் பாலிவுட் முன்னணி ஹீரோ இருந்தும் இந்த படத்தின் கதை களம் பிடித்து இந்த படத்தில் நடித்துள்ளார் அதை சிவா மிக சிறப்பாக செய்துள்ளார் அவரும் நம்மை மிகவும் கவர்ந்துள்ளார்.

இந்த படத்தின் பிளஸ் என்னவென்றால் இது ஒரு அக்ஷன் திரில்லர் அதை மிக சிறப்பாக செய்துள்ளார் தமிழுக்கு என்ன தேவையோ அதையும் திறம்பட செய்துள்ளார் என்று தான் சொல்லணும் படம் நிச்சயம் எல்லோரையும் கவரும் படத்தில் சின்ன சின்ன தவறுகள் உள்ளது குறிப்பாக காஜல் வெறியேற சுதிமாற பாடல் காட்சி கொஞ்சம் சினிமாத்தனம் என்று தான் சொல்லணும் அந்த காட்சியில் விவேக் ஓபராய் நடிப்பில் பின்னி இருக்கிறார்

மொத்தத்தில் விவேகம் அஜித்தின் மைல்கல் Rank 4.5/5

Leave a Reply