Tuesday, November 17
Shadow

காவல்துறைக்குள் தொடங்கும் மோதல்… கட்டுப்பாட்டை மீறும் ஒரு ‘என்கவுன்டர்’! பரபரப்பான களத்தில் உருவாகும் திலீபனின் ‘டிரான்ஸ்பர்’

காவல்துறைக்குள் தொடங்கும் மோதல்… கட்டுப்பாட்டை மீறும் ஒரு ‘என்கவுன்டர்’!

பரபரப்பான களத்தில் உருவாகும் திலீபனின் ‘டிரான்ஸ்பர்’

ஒரு காவல்துறை நடவடிக்கை. அதைச் செயல்படுத்தச் செல்லும் இரண்டு காவலர்கள். ஆனால், ஒரே பணியில் இருக்கும் இருவருக்கும் இடையே இருக்கும் கொள்கை வேறுபாடு, அந்த நடவடிக்கையையே வேறு திசைக்கு கொண்டு சென்றால் என்ன நடக்கும்?

இந்தக் கேள்வியை மையமாக வைத்து உருவாகியுள்ள குறும்படம்தான் ‘டிரான்ஸ்பர்’.

சௌந்தர்யா திலீபன், என். ராஜேந்திரன், ராமு தங்கராஜ் ஆகியோர் சில்வர் ஸ்ட்ரீம் ஸ்டுடியோஸ் பேனரில் தயாரிக்கும் இப்படத்தை, பிளாக் ஒயிபோ புரொடக்‌ஷன் ஹவுஸ் சார்பில் அருண் மாதேஸ்வரன் வழங்குகிறார்.

காவல்துறை என்கவுன்டர் சம்பவத்தை மையமாகக் கொண்ட இப்படத்தின் கதை, ஆரம்பத்தில் ஒரு வழக்கமான காவல்துறை நடவடிக்கையாகவே நகர்கிறது. ஆனால், சம்பவம் முன்னேற முன்னேற, காவல்துறைக்கு வெளியே இருப்பவர்களுடனான மோதலை விட, காவல்துறைக்குள்ளேயே உருவாகும் கருத்து மோதல்தான் முக்கிய பிரச்சினையாக மாறுகிறது.

ஒரே பணியைச் செய்யும் இரண்டு காவலர்களின் அணுகுமுறைகள் வேறுபடுகின்றன. அவர்களது தனிப்பட்ட நம்பிக்கைகள் ஒருபுறமும், பணியின் மீதான பொறுப்பு மறுபுறமும் நிற்கின்றன. அந்தச் சூழலில் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும் அடுத்தடுத்து எதிர்பாராத விளைவுகளை உருவாக்குகிறது.

நெருக்கடியான ஒரு தருணத்தில் கடமை, நம்பிக்கை, அதிகாரம், தனிப்பட்ட கொள்கை ஆகியவற்றுக்கு இடையே உருவாகும் குழப்பத்தை ‘டிரான்ஸ்பர்’ பேசுகிறது. குறிப்பாக, ஒரு நிறுவனத்துக்குள் இருக்கும் கொள்கை வேறுபாடு எவ்வாறு தனிப்பட்ட உறவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் இப்படம் பதிவு செய்கிறது.

கதையின் பரபரப்பை மட்டும் நம்பாமல், காவலர்களின் மனநிலை மற்றும் அவர்களுக்குள் உருவாகும் மோதலை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

திலீபன் எழுதி இயக்கும் இப்படத்தில் கபில் வேலவன், ஜவஹர் சக்தி, சேகர் நாராயணன், வினோத் பிரான்சிஸ், அருண் குமார், பாலா கார்த்திக், துரை ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படத்தின் இணை இயக்குநராக டி. ஜான்சன் மோகன்தாஸ் பணியாற்றுகிறார். விக்னேஷ் ராமகிருஷ்ணன் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும் காஸ்டிங் டைரக்டராகவும் பணியாற்றுகிறார்.

பழனியப்பன் கதிர் மற்றும் நவீன் லோகநாதன் ஒளிப்பதிவை கவனிக்கின்றனர். ராமு தங்கராஜ் புரொடக்‌ஷன் டிசைனராகவும், நாகூரன் ராமச்சந்திரன் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.

ஹரிஹரன் சுரேஷ் இசையமைக்க, ராஜேஷ் மஹே கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். ஒலி வடிவமைப்பு மற்றும் கலவையை ஜெய்சன் ஜோஸ், டேனியல் ஜெஃபர்சன் மேற்கொள்கின்றனர். பிரகாஷ் கலரிஸ்டாகவும், வீ டூ (We Duo) நிறுவனம் விஎஃப்எக்ஸ் பணிகளையும், போவாஸ் விளம்பர வடிவமைப்புகளையும் கவனித்துள்ளனர்.

ஒரு என்கவுன்டர் சம்பவத்தைச் சுற்றி தொடங்கி, அதே சம்பவத்தால் காவல்துறைக்குள்ளேயே உருவாகும் மோதலை நோக்கி நகரும் ‘டிரான்ஸ்பர்’, பரபரப்புடன் ஒரு அழுத்தமான கதைக்களத்தையும் சொல்லும் குறும்படமாக உருவாகியுள்ளது.

When Duty and Ideology Collide: ‘Transfer’ Explores a Conflict Within the Police Force

What begins as a routine police operation soon turns into a confrontation within the force itself in Dilipan’s upcoming short film ‘Transfer’.

Produced by Soundarya Dilipan, N. Rajendran and Ramu Thangaraj under the banner of Silver Stream Studios, the short film is presented by Arun Matheswaran on behalf of Black Yipo Production House.

Set against the backdrop of a police encounter, Transfer follows two police officers assigned to the same operation. While they begin with a common objective, differences in their personal ideologies gradually create a rift between them, taking the situation far beyond the boundaries of a routine police assignment.

The story begins as a police operation but slowly develops into a conflict within the department. As professional duty comes into direct conflict with personal beliefs, the situation takes an increasingly dangerous turn.

At the heart of the film is the clash between personal convictions, institutional responsibility and the pressure of the moment. As the two officers struggle to deal with the circumstances unfolding around them, their decisions lead to consequences that neither can fully control.

Rather than focusing solely on the action surrounding an encounter, Transfer looks at how ideological differences can find their way into professional institutions and personal relationships. The film also explores how, during a crisis, the boundaries between duty, loyalty and authority can become increasingly blurred.

Written and directed by Dilipan, the film features Kapil Velavan, Jawahar Sakthi, Sekar Narayanan, Vinoth Francis, Arun Kumar, Bala Karthik and Durai Harikrishnan in key roles.

T. Johnson Mohandas serves as the co-director, while Vignesh Ramakrishnan is the Creative Producer and Casting Director.

The cinematography is handled by Palaniyappan Kathir and Naveen Loganathan. Ramu Thangaraj is the Production Designer, with Nagooran Ramachandran taking care of the editing.

Hariharan Suresh has composed the music, while Rajesh Mahe is the Art Director. Jaison Jose and Daniel Jefferson have handled the sound design and mixing. Prakash is the Colorist, We Duo has worked on the VFX, and Boaz has handled the promotional designs.

With a tense narrative built around an encounter operation that gradually turns into an internal confrontation, Transfer aims to present a different perspective on duty, ideology and authority within the police force.