Wednesday, April 22
Shadow

விஸ்வாசம் 150 கோடி வசூல் உண்மையா பொய்யா பொங்கல் போட்டியில் ராஜினியா இல்லை அஜித்தா

இந்த பொங்கலுக்கு வெளியான ரஜினிகாந்த் பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்கள் இரண்டும் வசூலில் போடும் குடுமிப்பிடி சண்டை வலுத்து கொண்டே போகிறது காரணம் அஜித் விஜய் ரசிகர்கள் சண்டை விட அஜித் ரஜினி ரசிகர்கள் சண்டை தான் தற்போது இணையதளங்களில் ட்ரெண்டிங் இதற்கு காரணம் யார் நம்பர் 1 என்பது தான்

ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’, அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ ஆகிய இரண்டு படங்களும் போட்டி போட்டு வெளியாகி, அதே போட்டியில் வசூலையும் குவித்தன. மூன்றாவது வாரத்தைக் கடந்தும் இரண்டு படங்களும் பல தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கின்றன.

படம் வெளியான ஒரு வாரத்திலேயே இரண்டு படங்களில் எந்தப் படம் 100 கோடி வசூலைக் கடந்தது என்ற பரபரப்பு எழுந்தது. ‘பேட்ட’ தயாரிப்பாளர் தரப்பில் 11வது நாளில்தான் 100 கோடி வசூலை அவர்களது படம் தொடும் என்றார்கள். ஆனால், அதற்குப் பதிலடியாக ‘விஸ்வாசம்’ வினியோகஸ்தர் 8வது நாளிலேயே 125 கோடியை அவர்களது படம் கடந்ததாக அறிவித்தார்கள்.

இப்போது ‘விஸ்வாசம்’ படம் 150 கோடியைக் கடந்ததாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளது. 8 நாளில் 125 கோடியைக் கடந்ததாக அறிவித்தவர்கள், மேற்கொண்டு 11 நாளில் கூடுதலாக 25 கோடி வசூலித்ததா அல்லது அதற்கு மேலும் வசூலித்ததா என்று இன்னும் அறிவிக்கவில்லை.

‘பேட்ட’ படம் 11வது நாளில் 100 கோடியைக் கடக்கும் என்று சொன்னவர்களும் படம் 100 கோடியைக் கடந்ததா அல்லது அதற்கு மேலும் கடந்ததா என்று இதுவரை சொல்லவில்லை.

சமூகவலைத்தளம், யு டியுப் ஆகியவற்றில் பலரும் பலவிதமாக அதிகாரப்பூர்வமற்ற தவறான வசூல் நிலவரங்களைத் தெரிவித்து வருகின்றனர். அவற்றைத் தடுக்க சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களே அவர்களது படங்களின் வசூலை அறிவிக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அது ‘பேட்ட, விஸ்வாசம்’ படத்தில் முழுமையாக நடக்குமா என்பதை அவர்கள்தான் அறிவிக்க வேண்டும்.